வரலாறு படைத்தது மத்தியப்பிரதேசம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை ஞாயிற்றுக்கிழமை வென்று, போட்டியின் 87 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் ஆனது. 
வரலாறு படைத்தது மத்தியப்பிரதேசம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை ஞாயிற்றுக்கிழமை வென்று, போட்டியின் 87 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் ஆனது. 

கடந்த 10 ஆண்டுகளில் உள்நாட்டுப் போட்டிகளில் முக்கிய அணியாக பரிசீலிக்கப்படாத மத்திய பிரதேசம், 41 முறை ரஞ்சி சாம்பியனான மும்பையை வீழ்த்தி வெற்றிக் கோப்பையை முத்தமிட்டுள்ளது. 

கர்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை, 127.4 ஓவர்களில் 374 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. பிருத்வி ஷா தலைமையிலான அணியில் அதிகபட்சமாக சர்ஃப்ராஸ் கான் 13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 134 ரன்கள் சேர்க்க, மத்திய பிரதேச பெüலிங்கில் கெüரவ் யாதவ் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். 

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய மத்திய பிரதேசம், 177.2 ஓவர்களில் 536 ரன்கள் குவித்தது. ஆதித்யா ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான அணியில் யஷ் துபே 133, ரஜத் பட்டிதார் 122, சுபம் சர்மா 116 ரன்கள் விளாச, மும்பை ஷம்ஸ் முலானி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 162 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய மும்பை, கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை 57.3 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சர்ஃப்ராஸ் கான் 45, பிருத்வி ஷா 44 ரன்கள் சேர்க்க, மத்திய பிரதேச பெüலர் குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

இறுதியாக 108 என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி ஆடிய மத்திய பிரதேசம், முதலில் சற்றுத் தடுமாறினாலும் 29.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் அடுத்து வென்றது. ஹிமான்ஷு மந்த்ரி 37, சுபம் சர்மா 30, ரஜத் பட்டிதார் 30 ரன்கள் பங்களித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இறுதியில் பட்டிதாருடன், ஆதித்யா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை பெüலிங்கில் ஷம்ஸ் முலானி 3, தவல் குல்கர்னி 1 விக்கெட் எடுத்திருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com