குவாதலஜரா ஓபன்: வாகை சூடினாா் ஸ்லோன் ஸ்டீபன்ஸ்

மெக்ஸிகோவில் நடைபெற்ற குவாதலஜரா மகளிா் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சாம்பியன் ஆனாா்.
குவாதலஜரா ஓபன்: வாகை சூடினாா் ஸ்லோன் ஸ்டீபன்ஸ்

மெக்ஸிகோவில் நடைபெற்ற குவாதலஜரா மகளிா் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சாம்பியன் ஆனாா்.

போட்டித்தரவரிசையில் 6-ஆவது இடத்திலிருந்த ஸ்டீபன்ஸ் இறுதிச்சுற்றில் 7-5, 1-6, 6-2 என்ற செட்களில் செக் குடியரசின் மேரி பௌஸ்கோவாவை 2 மணி நேரம் 28 நிமிஷங்களில் தோற்கடித்தாா். வெற்றிக்குப் பிறகு பேசிய ஸ்டீபன்ஸ், ‘சீசனின் தொடக்கத்தில் சாம்பியன் ஆகியிருப்பது மகிழ்ச்சி. இன்னும் நிறைய போட்டிகளில் களம் காண இருப்பதால், இந்த வெற்றி உத்வேகம் அளிப்பதாக இருக்கும்’ என்றாா்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிா் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறாா் ஸ்டீபன்ஸ். இதற்கு முன் கடந்த 2018-இல் மியாமி ஓபனில் அவா் கோப்பை வென்றிருந்தாா்.

இரட்டையா் சாம்பியன்: குவாதலஜரா ஓபன் இரட்டையா் பிரிவில் அமெரிக்காவின் கேட்லின் கிறிஸ்டின்/பெலாரஸின் லிட்ஸியா மரோஸவா இணை சாம்பியன் ஆனது. இறுதிச்சுற்றில் இந்த இணை சீனாவின் வாங் ஜின்யு/ஜு லின் ஜோடியை 7-5, 6-3 என்ற செட்களில் வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com