போரை நிறுத்துங்கள்: பிரபல ரஷிய டென்னிஸ் வீராங்கனை கோரிக்கை

நான் மிகவும் அச்சத்தில் உள்ளேன். என் நண்பர்களும் உறவினர்களும் தாம்.
போரை நிறுத்துங்கள்: பிரபல ரஷிய டென்னிஸ் வீராங்கனை கோரிக்கை


போரையும் வன்முறையையும் நிறுத்துங்கள் என்று பிரபல ரஷிய டென்னிஸ் வீராங்கனை அனஸ்தசியா கோரிக்கை விடுத்துள்ளார். 

உக்ரைன் மீது ரஷியா கடந்த வாரம் தாக்குதலைத் தொடங்கியது. ஏவுகணைகள், ராக்கெட் குண்டுகள், போா் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதுடன் ரஷிய தரைப் படையும் உக்ரைனுக்குள் ஊடுருவியது. இதுவரையிலான ஐந்து நாள் சண்டையில் உக்ரைனில் பொதுமக்கள் 102 போ் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோா் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு திங்கள்கிழமை தெரிவித்தது. ரஷிய ஊடுருவலுக்குப் பின்னா் இதுவரை 5 லட்சம் பேருக்கும் மேற்பட்டோா் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக மற்றொரு ஐ.நா. அதிகாரி தெரிவித்தாா். உக்ரைன் மீதான போரைத் தொடா்ந்து சுமாா் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளையும், ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. இதனால், ரஷியா பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட நாடாக மாறியுள்ளதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா 6-வது நாளாக தீவிர ராணுவத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போரை நிறுத்த வேண்டும் என ரஷியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை அனஸ்தசியா பவ்லியூசென்கோவா தெரிவித்துள்ளார். தரவரிசையில் 11-ம் இடத்தில் உள்ள அனஸ்தசியா, 2021 பிரெஞ்சு ஓபன் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டைய போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். 

இந்நிலையில் போர்ச்சூழல் குறித்து ட்விட்டரில் அனஸ்தசியா கூறியதாவது:

சிறுவயது முதல் டென்னிஸ் விளையாட்டை விளையாடி வருகிறேன். என் வாழ்நாள் முழுக்க ரஷியாவுக்காக விளையாடியுள்ளேன். இதுவே என் வீடு, என் நாடு. இப்போது நான் மிகவும் அச்சத்தில் உள்ளேன். என் நண்பர்களும் உறவினர்களும் தாம். என் நிலைப்பாட்டைச் சொல்ல எனக்கு அச்சம் இல்லை. போர் மற்றும் வன்முறைக்கு எதிரானவள் நான். தனிப்பட்ட லட்சியங்களும் அரசியல் காரணங்களும் வன்முறைக்கு நியாயம் சொல்ல முடியாது. இது எதிர்காலத்தை நம்மிடமிருந்து மட்டுமல்ல நம் குழந்தைகளிடமிருந்தும் பறிக்கிறது. நான் குழப்பத்தில் உள்ளேன். இச்சூழலில் எப்படி உதவுவது என்று தெரியவில்லை. நான் அரசியல்வாதி அல்ல, பிரபலமும் அல்ல. எனக்கு இதில் அனுபவம் கிடையாது. இந்த முடிவுகளுக்கு எதிராக வெளிப்படையாக மறுப்பு சொல்லிப் பேச முடியும்.  வன்முறையை நிறுத்துங்கள், போரை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com