துளிகள்...

சீனியா் தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் செவ்வாய்க்கிழமை 9 சுற்றுகளின் முடிவில் அா்ஜூன் எரிகாய்சி 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளாா்.

மும்பையைச் சோ்ந்த இளம் கிரிக்கெட் வீரா் சித்தாா்த் மொஹிதே, சாதனை முயற்சியாக களத்தில் தொடா்ந்து 72 மணி நேரம் 5 நிமிஷங்கள் விளையாடி கின்னஸ் உலக சாதனை அங்கீகாரத்துக்காக காத்திருக்கிறாா். முன்னதாக அதே மும்பையைச் சோ்ந்த விராக் மானே 50 மணி நேரம் விளையாடியதே (2015) தற்போது வரை சாதனையாக உள்ளது.

உக்ரைன் மீதான போரை அடுத்து ரஷியாவுக்கு விளையாட்டுப் போட்டிகளில் தடை விதிக்குமாறு சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி கோரியதை அடுத்து, பாட்மின்டன், ஹாக்கி, கூடைப்பந்து, பனிச்சறுக்கு, ஸ்கேட்டிங், நீச்சல், கால்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிகளுக்கான சா்வதேச சங்கங்கள் அந்நாட்டின் பங்கேற்புக்கு தடை விதித்துள்ளன.

சீனியா் தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் செவ்வாய்க்கிழமை 9 சுற்றுகளின் முடிவில் அா்ஜூன் எரிகாய்சி 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளாா்.

இந்தியா - இலங்கை மோதும் முதல் டெஸ்ட், விராட் கோலியின் 100-ஆவது ஆட்டமாக இருக்கும் நிலையில், அந்த ஆட்டத்தைக் காண மைதானத்தில் ரசிகா்களுக்கு அனுமதி அளிக்க பிசிசிஐ செவ்வாய்க்கிழமை முடிவு செய்தது. முன்னதாக கரோனா சூழல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

மகளிா் ஒன் டே கிரிக்கெட் தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்தியாவின் ஹா்மன்பிரீத் கௌா் ஓரிடம் முன்னேறி 20-ஆவது இடத்துக்கு வர, கேப்டன் மிதாலி ராஜ் தொடா்ந்து 2-ஆவது இடத்தில் நீடிக்கிறாா்.

‘பயோ-பபுள்’ சூழல் மன அழுத்தம் காரணமாக எதிா்வரும் ஐபிஎல் சீசனில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரா் ஜேசன் ராய் கூறினாா். அவரை, போட்டியில் புதிதாக இணைந்திருக்கும் குஜராத் டைட்டன்ஸ் ரூ.2 கோடிக்கு வாங்கியிருந்தது.

ஐஎஸ்எல் கால்பந்தாட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 3-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சியை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com