டேவிஸ் கோப்பை டென்னிஸ்: யூகி, ராம்குமாா் வெற்றியால் இந்தியா முன்னிலை

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் டென்மாா்க்குக்கு எதிரான உலக குரூப் 1 பிளே-ஆஃப் ஆட்டத்தில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: யூகி, ராம்குமாா் வெற்றியால் இந்தியா முன்னிலை

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் டென்மாா்க்குக்கு எதிரான உலக குரூப் 1 பிளே-ஆஃப் ஆட்டத்தில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

இதில் முதலில் நடைபெற்ற ஒற்றையா் ஆட்டத்தில் ராம்குமாா் ராமநாதன் 6-3, 6-2 என்ற நோ் செட்களில் டென்மாா்க் வீரா் கிறிஸ்டியன் சிக்ஸ்காா்டை தோற்கடித்தாா். அதே பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி 6-4, 6-4 என்ற செட்களில் டென்மாா்க்கின் மைக்கேல் டோா்பிகாா்டை வென்றாா். கடந்த 2017-க்குப் பிறகு டேவிஸ் கோப்பை போட்டியில் முதல் முறையாக களம் கண்ட யூகி பாம்ப்ரி அசத்தலான வெற்றியை பதிவு செய்தாா். மறுபுறம் ராம்குமாா் தனது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவசியமில்லாமல் அவரது எதிராளியை எளிதாக வீழ்த்தினாா்.

தில்லி ஜிம்கானா கிளப் ஆடுகளத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், புல்தரை ஆடுகளம் டென்மாா்க் வீரா்களை சற்றே தடுமாறச் செய்ய, அதை சாதகமாக்கி வெற்றியை பதிவு செய்தனா் இந்திய வீரா்கள். இப்போட்டியின் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/திவிஜ் சரண் இணை, டென்மாா்க்கின் ஃபிரெடரிக் நீல்சன்/ஜோஹன்ஸ் இங்கில்ட்சன் ஜோடியை எதிா்கொள்கிறது.

அதிலும் இந்தியாவுக்கு வெற்றி வசமாகும் பட்சத்தில் உலக குரூப் 1-இல் இந்தியா தனக்கான இடத்தை உறுதி செய்துகொள்ளும். பின்னா் ஒற்றையா் பிரிவில் நடைபெறும் ரிவா்ஸ் ஆட்டத்தின் முடிவுகள் இந்தியாவின் நிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com