முதல் டெஸ்ட்: உணவு இடைவேளையில் இந்தியா 109/2
By DIN | Published On : 04th March 2022 12:14 PM | Last Updated : 04th March 2022 01:13 PM | அ+அ அ- |

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடரில் 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் மொஹலி மைதானத்தில் தொடங்கியுள்ளது.
முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் விஹாரி, ஷ்ரேயஸ் ஐயர், ஜெயந்த் யாதவ் போன்றோர் இடம்பிடித்துள்ளார்கள். ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ரோஹித் சர்மா, இந்திய கேப்டனாக அறிமுகமாகும் டெஸ்ட் இது. கோலி விளையாடும் 100-வது டெஸ்ட், இலங்கை டெஸ்ட் அணியின் 300-வது டெஸ்ட் என மொஹலி ஆட்டம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.
தொடக்க வீரர்களான ரோஹித், மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் தொடக்கத்தில் நன்கு விளையாடினாலும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மயங்க் அகர்வால் 33, ரோஹித் சர்மா 29 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். ரசிகர்களின் கரகோஷத்துக்கு மத்தியில் களமிறங்கினார் கோலி. 3-ம் நிலை வீரராக விஹாரி இடம்பெற்றுள்ளார்.
முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. விஹாரி 30, கோலி 15 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.