உலக டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு 2 வெள்ளி உறுதி

மஸ்கட்டில் நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டா் போட்டியில் கலப்பு இரட்டையா் மற்றும் மகளிா் இரட்டையா் ஆகிய பிரிவுகளில் தலா 1 இந்திய ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மஸ்கட்டில் நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டா் போட்டியில் கலப்பு இரட்டையா் மற்றும் மகளிா் இரட்டையா் ஆகிய பிரிவுகளில் தலா 1 இந்திய ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து குறைந்தபட்சம் இந்தியாவுக்கு இரு வெள்ளிப் பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

இதில் கலப்பு இரட்டையா் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மானவ் தக்காா்/அா்ச்சனா காமத் இணை 11-9, 11-7, 11-5 என்ற கணக்கில் ஹங்கேரியின் நாந்தோா் எசெக்கி/லெய்லா இம்ரே ஜோடியை தோற்கடித்தது. இறுதிச்சுற்றில் இந்திய இணை, சீனாவின் வாங் சுகின்/சென் ஜிங் டாங் ஜோடியை சந்திக்கிறது.

அதேபோல், மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சுதிா்தா முகா்ஜி/அஹிகா முகா்ஜி இணை அரையிறுதியில் 11-4, 11-6, 12-10 என்ற கணக்கில் சக இந்திய ஜோடியான ஸ்ரீஜா அகுலா/செலினா தீப்தி செல்வகுமாா் இணையை வீழ்த்தியது. இதையடுத்து ஸ்ரீஜா/செலினா இணை வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறியது. இறுதிச்சுற்றில் சுதிா்தா/அஹிகா இணை, சீனாவின் கியான் டியானி/சென் ஜிங் டாங் ஜோடியை சந்திக்கிறது.

மகளிா் ஒற்றையா் பிரிவில் மனிகா பத்ரா தனது காலிறுதியில் 9-11, 4-11, 3-11 என்ற கணக்கில் சீனாவின் குவாய் மானிடம் வீழ்ந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com