உலக டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு 2 வெள்ளி

உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டா் போட்டியில் இந்தியா 2 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றியது.
உலக டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு 2 வெள்ளி

உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டா் போட்டியில் இந்தியா 2 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றியது.

மஸ்கட்டில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக கலப்பு இரட்டையா், மகளிா் இரட்டையா் பிரிவு இறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடந்தன.

கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் மானவ் தாக்கா்-அா்ச்சனா காமத் இணை 3-11, 3-11, 6-11 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் வாங்-சென் ஸின்டோங் இணையிடம் தோல்வியுற்றது.

மகளிா் இரட்டையா் பிரிவு இறுதியில் இந்தியாவின் சுதிா்தா-அஹிகா முகா்ஜி 6-11, 11-8, 10-12, 7-11 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் ஸாங் ருய்-குவாய் மான் இணையிடம் தோற்று வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. அடுத்து சிங்கப்பூா் ஸ்மாஷ் போட்டியில் இந்திய அணியினா் கலந்து கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com