இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவ் நீக்கப்பட்டரா?: பும்ரா விளக்கம்

2-வது டெஸ்டில் குல்தீப் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவ் நீக்கப்பட்டரா?: பும்ரா விளக்கம்

இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவ் நீக்கப்படவில்லை என இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பும்ரா கூறியுள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையே மொஹலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை அடைந்தது. இந்நிலையில் பெங்களூரில் நாளை முதல் (மார்ச் 12) பகலிரவு ஆட்டமாக 2-வது டெஸ்ட் நடைபெறுகிறது. பெங்களூர் டெஸ்டுக்கு 100% ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் 3-வது பகலிரவு டெஸ்ட் இது. இதற்கு முன்பு கொல்கத்தா, ஆமதாபாத்தில் பகலிரவு டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. 

2-வது டெஸ்டுக்கான இந்திய அணியில் அக்‌ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா, குல்தீப் யாதவ் விடுவிக்கப்பட்டது பற்றி கூறியதாவது:

இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவை நீக்கவில்லை. கரோனா தடுப்பு வளையத்தில் நீண்ட நாளாக அவர் உள்ளார். வீட்டுக்குப் போக வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கரோனா தடுப்பு வளையத்தில் இருப்பது அவ்வளவு எளிதல்ல. 2-வது டெஸ்டில் குல்தீப் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும் இரு மாத ஐபிஎல் போட்டிக்காக அவர் குடும்பத்தை விட்டு நீண்ட நாள் பிரிந்திருக்க வேண்டும். எனவே ஐபிஎல் போட்டிக்கு முன்பு குடும்பத்தினருடம் நேரம் செலவழித்து ஓய்வெடுக்க அவருக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com