Enable Javscript for better performance
KSCA allows full capacity for Bengaluru Test- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இந்தியா - இலங்கை தொடர்: பகலிரவு டெஸ்டுக்கு 100% ரசிகர்கள் அனுமதி

    By DIN  |   Published On : 11th March 2022 11:45 AM  |   Last Updated : 11th March 2022 11:45 AM  |  அ+அ அ-  |  

    fans_ani_20220304224Lxx

     

    இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் பெங்களூர் டெஸ்டுக்கு 100% ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இரு அணிகளுக்கிடையே மொஹலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை அடைந்தது. இந்நிலையில் பெங்களூரில் நாளை முதல் (மார்ச் 12) பகலிரவு ஆட்டமாக 2-வது டெஸ்ட் நடைபெறுகிறது. ஆரம்பத்தில் பெங்களூர் மைதானத்துக்கு 50% ரசிகர்களே அனுமதிக்கப்பட்டார்கள். எனினும் கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக இந்தியா முழுக்க குறைவாக உள்ளதால் தற்போது 100% ரசிகர்களுக்கு அனுமதி வழங்குவதாக கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. மாநில அரசின் அனுமதி கிடைத்த பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டெஸ்டுக்கான ஒருநாள் டிக்கெட்டுக்கு ரூ. 100 முதல் ரூ. 1250 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 

    முதல் இரு நாள்களுக்கு 10,000 டிக்கெட்டுகள் விற்றுவிட்டதாகவும் கூடுதல் டிக்கெட்டுகளை இன்று முதல் விற்பனை செய்யவுள்ளதாகவும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. 

    இந்தியாவில் நடைபெறும் 3-வது பகலிரவு டெஸ்ட் இது. இதற்கு முன்பு கொல்கத்தா, ஆமதாபாத்தில் பகலிரவு டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp