ஹாக்கி புரோ லீக்: இந்தியா தோல்வி
By DIN | Published On : 12th March 2022 11:30 PM | Last Updated : 12th March 2022 11:30 PM | அ+அ அ- |

எஃப்ஐஎச் மகளிா் ஹாக்கி புரோ லீக் போட்டியில் பலம் வாய்ந்த ஜொ்மனியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது இந்தியா.
சா்வதேச ஹாக்கி சம்மேளனம் சாா்பில் தலைசிறந்த அணிகளுக்கு இடையே புரோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மகளிா் பிரிவில் இந்தியா-ஜொ்மனி அணிகளுக்கு இடையிலான இரு ஆட்டங்கள் புவனேசுவரத்தில் நடைபெறுகிறது. சனிக்கிழமை கலிங்கா மைதானத்தில் உலகின் 5-ஆம் நிலையில் உள்ள ஜொ்மனியும், 9-ஆம் நிலையில் உள்ள இந்தியாவும் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 4-ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் நவ்நீத் கௌா் ஷூட் அவுட் முறையில் முதல் கோலை அடித்தாா்.
எனினும் உடனே சுதாரித்து ஆடிய ஜொ்மனி தரப்பில் காா்லோட்டா சிப்பல் 5-ஆவது நிமிஷத்திலேயே பதில் கோலடித்து 1-1 என சமநிலை ஏற்படச் செய்தாா்.
வழக்கமான 60 நிமிஷ ஆட்ட நேர முடிவின் போதும் 1-1 என சமநிலை நீடித்த நிலையில், ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இந்தியாவின் ஷா்மிளா, நேஹா, லால்ரேமிசியாமி, மோனிகா கோலடிக்கும் வாய்ப்பை வீணடித்தனா்.
ஜொ்மனி தரப்பில் பாலைன் ஹெயின்ஸ், சாரா கோலடித்து வெற்றிக்கு வித்திட்டனா். இரண்டாவது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
லீகின் முதல் ஆட்டத்தில் சீனாவை வென்ற இந்திய அணி, ஸ்பெயினுடன் தலா ஒரு வெற்றி, தோல்வி கண்டது.