Enable Javscript for better performance
IND Women won by 155 runs- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மகளிர் உலகக் கோப்பை; மந்தனா, கெளர் சதங்களால் மே.இ. தீவுகள் அணியை நொறுக்கிய இந்தியா

    By DIN  |   Published On : 12th March 2022 01:41 PM  |   Last Updated : 12th March 2022 01:41 PM  |  அ+அ அ-  |  

    Harmanpreet_Kaur_nz_2022_ani_20220224090Lxx

    ஹர்மன்ப்ரீத் கெளர் (கோப்புப் படம்)

     


    இந்திய அணி 50 ஓவர்களில் 317 ரன்கள் அடித்தாலும் மே.இ. தீவுகள் அணி தொடக்கத்தில் இந்திய ரசிகர்களை லேசாக நடுங்க வைத்துவிட்டது.

    தொடக்க வீராங்கனைகளான டாட்டினும் ஹேலி மேத்யூஸும் வரிசையாக பவுண்டரிகள் அடித்தார்கள். எப்படிப் போட்டாலும் பந்துவீச்சை நொறுக்கினார்கள். 12 ஓவர் முடிந்தபோது மே.இ. தீவுகள் அணியின் ஸ்கோர் 100 என இருந்தது. இதே வேகத்தில் கூட வேண்டாம், இதற்குப் பிறகு சிறிது நிதானமாகச் சென்றாலும் தோல்வியடையும் வாய்ப்பு இருந்ததால் இந்திய அணியினரின் உடல்மொழியிலும் பயம் தெரிந்தது.

    காயத்துடன் விளையாடிய டாட்டின் 35 பந்துகளில் அரை சதமெடுத்தார். 13-வது ஓவரில் 62 ரன்களுடன் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 46 பந்துகளில் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸர். உலகக் கோப்பை வரலாற்றில் மே.இ. தீவுகள் மகளிர் அணி முதல்முறையாக முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை எடுத்தது. முதல் விக்கெட்டை எடுக்கத்தான் இந்திய அணி மிகவும் சிரம்பட்டது. அதன்பிறகு ஆட்டம் அதன் கைக்கு வந்தது. இதன்பிறகு வந்த புதிய வீராங்கனைகளைச் சொற்ப ரன்களில் வீழ்த்தினார்கள் இந்தியப் பந்துவீச்சாளர்கள். ஹேலி மேத்யூஸும் 36 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது ஆட்டத்தின் முடிவு தெளிவானது. தொடக்க வீராங்கனைகளுக்குப் பிறகு இருவரைத் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தார்கள். 

    அதிக ரன்கள் வித்தியாசத்துடன் வெற்றி பெற்றால் தான் நெட்ரன்ரேட் நல்லவிதமாக மாறும் என எண்ணியது இன்று நிறைவேறியது. மே.இ. தீவுகள் அணி, 40.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ராணா 3 விக்கெட்டுகளும் மேக்னா சிங் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இந்த ஆட்டத்தில் 1 விக்கெட் எடுத்த ஜுலான் கோஸ்வாமி, மொத்தமாக 40 விக்கெட்டுகளுடன் உலகக் கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற நிலையை அடைந்தார். 

    முந்தைய ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராகத் தோல்வியடைந்த இந்திய அணி, அடுத்த இரு நாள்களில் அட்டகாசமான வெற்றியை அடைந்துள்ளது. ஆட்டம் முடிந்தபிறகு இந்திய அணியினரிடம் தென்பட்ட உற்சாகம் புதிய நம்பிக்கையை அளிப்பதாக இருந்தது. 

    ஹேமில்டனில் நடைபெற்ற உலகக் கோப்பை ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. மந்தனா, ஹர்மன்ப்ரீத் கெளர் ஆகிய இருவரும் சதங்கள் அடித்ததால் இந்திய அணி 317 ரன்களைக் குவித்தது. 

    21 ரன்களில் 6 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் யாஷ்திகா பாட்டியா. இதன்பிறகு கேப்டன் மிதாலி ராஜ் 5, தீப்தி சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இந்திய அணி 78 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மந்தனாவும் ஹர்மன்ப்ரீத்தும் அற்புதமான கூட்டணியை அமைத்தார்கள். மந்தனா 66 பந்துகளிலும் கெளர் 61 பந்துகளிலும் அரை சதங்களை எட்டினார்கள். இதன்பிறகு அதிரடியாக விளையாடிய மந்தனா, 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 108 பந்துகளில் சதமெடுத்து அசத்தினார். உலகக் கோப்பைக்கு முன்பு சுமாராக விளையாடி விமர்சனங்களுக்கு ஆளான கெளர், இன்று தனது திறமையை வலுவாக நிரூபித்தார். 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் சதமடித்தார். 2017 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் சதமெடுத்துள்ளார். 4-வது விக்கெட்டுக்கு மந்தனாவும் கெளரும் 184 ரன்கள் எடுத்தார்கள். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் எந்தவொரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் எடுத்த இந்திய ஜோடி என்கிற சாதனையைப் படைத்தார்கள். மந்தனா 123 ரன்களுக்கும் கெளர் 109 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது. கடைசியில் 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தாலும் இந்தப் பெரிய ஸ்கோரே மே.இ. தீவுகள் அணி தடுமாற முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது. 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp