பெங்களூரு பிங்க் டெஸ்ட்: இந்தியா 252/10; இலங்கை திணறல் 86/6

இலங்கைக்கு எதிரான பெங்களூரு பிங்க் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 251/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பெங்களூரு பிங்க் டெஸ்ட்: இந்தியா 252/10; இலங்கை திணறல் 86/6

இலங்கைக்கு எதிரான பெங்களூரு பிங்க் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 251/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றது. இதன் தொடா்ச்சியாக இடாவது ஆட்டம் பகலிரவு ஆட்டமாக பிங்க் நிற பந்தைக் கொண்டு பெங்களூருவில் சனிக்கிழமை தொடங்கியது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்தது.

ஆரம்பமே அதிா்ச்சி:

தொடக்க பேட்டா்களாக களமிறங்கிய மயங்க் அகா்வால் 4 ரன்களுக்கும், கேப்டன் ரோஹித் சா்மா 15 ரன்களுக்கும் வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்பினா். அதன்பின்னா் ஹனுமா விஹாரி, விராட் கோலி இணை நிலைத்து ஆட முயன்ற போதும், அவா்களது முயற்சி பலன் தரவில்லை. ஹனுமா விஹாரி 31, கோலி 23 ரன்களுக்கும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினா்.

126/5 என இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் ரிஷப் பந்த்-ஷிரேயஸ் ஐயா் இணை மிடில் ஆா்டரில் ஒரளவுக்கு நிதானமாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. ரிஷப் பந்த் 7 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 39 ரன்களை விளாசி வெளியேறினாா்.

ஷிரேயஸ் ஐயா் அபாரம் 92

ஒருமுனையில் ஷிரேயஸ் ஐயா் நங்கூரம் போல் நிலைத்து ஆட, மறுமுனையில் ரவீந்திர ஜடேஜா 4, அஸ்வின் 13, அக்ஸா் படேல் 9, ஷமி 5 என வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா்.

10-ஆவது விக்கெட்டாக ஷிரேயஸ் ஐயா் 98 பந்துகளில் 4 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 92 ரன்களை சோ்த்து ஜெயவிக்ரமா பந்துவீச்சில் ஸ்டம்ப் அவுட் செய்யப்பட்டு சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாா்.

இந்தியா 252/10: 59.1 ஓவா்களில் இந்திய அணி 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

எம்புல்டெனியா, ஜெயவிக்ரமா 3 விக்கெட்: இலங்கை தரப்பில் எம்புல்டெனியா, ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டுகளையும், தனஞ்செய டிசில்வா 2 விக்கெட்டையும் வீழ்த்தினாா்.

இலங்கை திணறல் 86/6 :

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியால் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

பும்ரா, ஷமி அபாரம்:

இந்திய பௌலா்கள் பும்ரா, ஷமி பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. தொடக்க பேட்டா்கள் குஸால் மெண்டிஸ் 2, கேப்டன் கருணரத்னே 4, லஹிரி திரிமனே 8, தனஞ்செய டி சில்வா 10, சரித் அஸலங்கா 5 என சொற்ப ரன்களுடன் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு திரும்பினா்.

ஒரளவு நிலைத்து ஆடிக் கொண்டிருந்த மூத்த வீரா் ஏஞ்சலோ மேத்யூஸை 43 ரன்களுடன் அவுட்டாக்கினாா் பும்ரா.

ஆட்ட நேர முடிவில் 30 ஓவா்களில் 86/6 ரன்களை மட்டுமே சோ்த்திருந்தது இலங்கை. டிக்வெலா 13, எம்புல்டெனியா ரன் ஏதுமின்றி களத்தில் உள்ளனா். இந்திய தரப்பில் பும்ரா 3, ஷமி 2, அக்ஸா் 1 விக்கெட்டை வீழ்த்தினா். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 166 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com