முகப்பு விளையாட்டு செய்திகள்
இந்தியா அசத்தல்
By DIN | Published On : 14th March 2022 11:52 PM | Last Updated : 15th March 2022 05:47 AM | அ+அ அ- |

இந்தியா அசத்தல்
இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் 238 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்ற இந்தியா, தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக ஷ்ரேயஸ் ஐயா், தொடா் நாயகனாக ரிஷப் பந்த் தோ்வாகினா்.
இந்தியாவுக்கு பயணம் வந்த இலங்கை அணி, முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ‘ஒயிட்வாஷ்’ ஆனதைப் போல, இந்த டெஸ்ட் தொடரையும் முழுதாக இழந்து வெற்றியின்றி வெறும் கையுடன் நாடு திரும்புகிறது.
தோல்வியில்லா நிறைவு: இத்துடன் 2021-22 காலண்டரில் உள்நாட்டு போட்டிகளை தோல்வியின்றி நிறைவு செய்திருக்கிறது இந்திய அணி. இந்த காலகட்டத்தில் சொந்த மண்ணில் ஆடிய 4 டெஸ்ட்டுகளில் 3-இல் வெற்றி பெற்று, 1 ஆட்டத்தை டிரா செய்துள்ளது. அதுபோக, தான் ஆடிய 3 ஒன் டே-க்களிலும், 9 டி20-களிலும் வென்றுள்ளது இந்தியா.