Enable Javscript for better performance
Bangladesh get their first Women's Cricket World Cup win in their debut tournament- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு விளையாட்டு செய்திகள்

    மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி முதல் உலகக் கோப்பை வெற்றியைப் பெற்ற வங்கதேசம்

    By DIN  |   Published On : 14th March 2022 11:14 AM  |   Last Updated : 14th March 2022 11:14 AM  |  அ+அ அ-  |  

    Sidra_Amin_AP22065195476845

    சதமடித்த அமின் (கோப்புப் படம்)

     

    மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் முதல் வெற்றியை அடைந்துள்ளது வங்கதேசம். அதேசமயம், பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 18 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. 

    ஹேமில்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. வங்கதேச அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. ஃபர்கனா 71 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானின் நஷாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேச அணியின் அதிகபட்ச ஸ்கோர் இது. 

    பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸில் தொடக்க வீராங்கனை சிட்ரா அமீன் 104 ரன்கள் எடுத்தார். எனினும் பாகிஸ்தான் அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடக்க வீராங்கனைகள் 91 ரன்கள் வரைக்கும் கூட்டணி அமைத்தார்கள். 8 ஓவர்கள் மீதமிருந்தபோது 183/2 என வலுவான நிலையில் இருந்தது பாகிஸ்தான். எனினும் கடைசிக்கட்டத்தில் இதர பேட்டர்களால் இலக்கை ஒழுங்காக விரட்ட முடியாமல் போனது.  

    உலகக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாக விளையாடும் வங்கதேச அணி, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. எனினும் பாகிஸ்தான் அணி கடந்த 18 உலகக் கோப்பை ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. ஆடவர், மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகளில் 18 தொடர் தோல்விகளை எதிர்கொண்ட ஜிம்பாப்வேயுடன் பாகிஸ்தான் இணைந்துள்ளது. 1983 முதல் 1992 வரை ஜிம்பாப்வே அணி, 18 தோல்விகளை அடைந்தது. 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp