முகப்பு விளையாட்டு செய்திகள்
பிங்க் டெஸ்ட்: இலங்கைக்கு இமாலய இலக்கு
By DIN | Published On : 14th March 2022 05:22 AM | Last Updated : 14th March 2022 05:22 AM | அ+அ அ- |

இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்தியா 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
447 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி 2}ஆவது இன்னிங்ûஸ தொடங்கியிருக்கும் இலங்கை, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் அடித்துள்ளது. ஆட்டத்தில் இன்னும் 3 நாள்கள் இருந்தாலும், இந்திய பெüலர்களை சமாளிப்பது இலங்கையின் பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும். எனவே, இந்த ஆட்டத்திலும் இந்தியாவுக்கு வெற்றி வசமாகும் எனத் தெரிகிறது.
முன்னதாக, சனிக்கிழமை ஆட்டத்தை 6 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களுடன் நிறைவு செய்திருந்தது இலங்கை. ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தை நிரோஷன் டிக்வெல்லா, லசித் எம்புல்தெனியா தொடர்ந்தனர்.
இதில் டிக்வெல்லா 21 ரன்களுக்கு வெளியேற, எம்புல்தெனியா 1, சுரங்கா லக்மல் 5, விஷ்வா ஃபெர்னாண்டோ 8 என விக்கெட்டுகள் வரிசையாக சரிய, 35.5 ஓவர்களில் 109 ரன்களுக்கே முடிவுக்கு வந்தது இலங்கையின் முதல் இன்னிங்ஸ்.
இந்திய பெüலர்களில் ஜஸ்பிரீத் பும்ரா, சொந்த மண்ணில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினார். ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி ஆகியோர் தலா 2, அக்ஸர் படேல் 1 விக்கெட் சரித்தனர்.
பின்னர் இந்திய இன்னிங்ஸில் ஷ்ரேயஸ் ஐயர் 67, ரிஷப் பந்த் 50 ரன்கள் விளாச, கேப்டன் ரோஹித் சர்மா 46, ஹனுமா விஹாரி 35 ரன்கள் அடித்தனர். மயங்க் அகர்வால் 22, விராட் கோலி 13, ரவீந்திர ஜடேஜா 22, ரவிச்சந்திரன் அஸ்வின் 13, அக்ஸர் படேல் 9 ரன்கள் அடித்தனர்.
68.5 ஓவர்களில் 303 ரன்கள் அடித்திருந்தபோது டிக்ளேர் செய்தது இந்தியா. முகமது ஷமி 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பெüலர்களில் பிரவீண் ஜெயவிக்ரமா 4, லசித் எம்புல்தெனியா 3, விஷ்வா ஃபெர்னாண்டோ, தனஞ்ஜெய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் 2ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய இலங்கை, முதல் ஓவரிலேயே லாஹிரு திரிமனே விக்கெட்டை இழந்தது. ஞாயிற்றுக்கிழமை முடிவில் திமுத் கருணாரத்னே 10, குசல் மெண்டிஸ் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.