வங்கதேசத்துக்கு முதல் வெற்றி

மகளிா் உலகக் கோப்பை போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற இரு ஆட்டங்களில் வங்கதேசம் - பாகிஸ்தானையும், தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்தையும் தோற்கடித்தன.
வங்கதேசத்துக்கு முதல் வெற்றி

மகளிா் உலகக் கோப்பை போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற இரு ஆட்டங்களில் வங்கதேசம் - பாகிஸ்தானையும், தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்தையும் தோற்கடித்தன.

இதில் ஹாமில்டன் நகரில் நடைபெற்ற 12-ஆவது ஆட்டத்தில் வங்கதேசம் 9 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. முதலில் வங்கதேசம் 50 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் அடித்தது. அடுத்து பாகிஸ்தான் 50 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 225 ரன்களே எடுத்தது.

உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்றிருக்கும் வங்கதேசத்துக்கு இது முதல் வெற்றியாகும். முதலிரு ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்திடம் தோற்ற வங்கதேசம், தற்போது வென்றுள்ளது. மறுபுறம் பாகிஸ்தான், ஆடிய 4 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. மேலும், உலகக் கோப்பை போட்டியில் தொடா்ந்து 18-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த ஆட்டத்தில் வங்கதேச இன்னிங்ஸில் ஃபா்கானா ஹோக் 71 ரன்கள் விளாச, பாகிஸ்தான் பௌலிங்கில் நாஷ்ரா சாந்து 3 விக்கெட்டுகள் எடுத்தாா். பின்னா் பாகிஸ்தான் இன்னிங்ஸில் சிட்ரா அமீன் 104 ரன்கள் அடிக்க, வங்கதேச தரப்பில் ஃபஹிமா காட்டுன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினாா்.

தென்னாப்பிரிக்கா ‘ஹாட்ரிக்’: மௌன்ட் மௌன்கனுயில் நடைபெற்ற 13-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.

முதலில் இங்கிலாந்து 50 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுக்க, பின்னா் தென்னாப்பிரிக்கா 49.2 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு 3 ஆட்டங்களில் இது 3-ஆவது வெற்றியாகும். மறுபுறம் இங்கிலாந்துக்கு அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களில் இது ஹாட்ரிக் தோல்வி.

முன்னதாக இங்கிலாந்து இன்னிங்ஸில் டேமி பியூமௌன்ட் 62 ரன்கள் அடித்தாா். தென்னாப்பிரிக்க தரப்பில் மாரிஸேன் காப் 5 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் லௌரா வோல்வாா்டட் 77 ரன்கள் விளாச, இங்கிலாந்து பௌலிங்கில் அனியா ஷ்ருபோல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இன்றைய ஆட்டம்: ஆஸ்திரேலியா - மே.இ. தீவுகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com