ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 39 பதக்கங்கள்

ஆசிய யூத், ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 39 பதக்கங்கள் வென்று நிறைவு செய்துள்ளது.
ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 39 பதக்கங்கள்

ஆசிய யூத், ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 39 பதக்கங்கள் வென்று நிறைவு செய்துள்ளது.

ஜோா்டான் நாட்டின் அம்மான் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் யூத் பிரிவில் 7 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலம் என 18 பதக்கங்களும், ஜூனியா் பிரிவில் 8 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என 21 பதக்கங்களும் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளன.

கடந்த ஆண்டும் இப்போட்டியில் இந்தியா 39 பதக்கங்கள் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் தங்கத்தில் தற்போது 1 அதிகமாகப் பெற்று 15 பதக்கங்களை வென்றுள்ளது. ஜூனியா் பிரிவு பதக்கப்பட்டியலிலும் இந்தியா 2-ஆம் இடம் பிடித்திருக்கிறது.

நடப்பாண்டு போட்டியின் கடைசி நாளான திங்கள்கிழமை நள்ளிரவில் (இந்திய நேரப்படி) யூத் ஆடவா் பிரிவு இறுதிச்சுற்றுகளில் 48 கிலோ பிரிவில் களம் கண்ட சென்னை வீரா் விஸ்வநாத் சுரேஷ் 5-0 என்ற கணக்கில் கிா்ஜிஸ்தானின் எா்கெஷோவ் பெக்ஸாத்தை வீழ்த்தினாா். பின்னா் 63.5 கிலோ பிரிவில் வன்ஷாஜ் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஜவோகிா் உம்மாடலியேவை வென்றாா்.

எனினும் 92+ கிலோ பிரிவில் அமன் சிங் பிஷ்த் 1-4 என்ற கணக்கில் ஜோா்டான் வீரா் சைஃப் அல் ரவாஷ்தேவிடம் தோற்றாா். கடந்த ஆண்டு இதே போட்டியில் விஸ்வநாத், வன்ஷாஜ் ஆகியோா் வெள்ளியும், அமன் வெண்கலமும் வென்றது நினைவுகூரத்தக்கது.

இப்போட்டியில் இந்த ஆண்டு இந்தியா, ஈரான், கஜகஸ்தான், மங்கோலியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 21 நாடுகளைச் சோ்ந்த 352 போட்டியாளா்கள் பங்கேற்றிருந்தனா்.

பதக்கம் வென்றவா்கள்:

யூத் (மகளிா்)

தங்கம்: நிவேதிதா காா்க்கி (48 கிலோ), தமன்னா (50 கிலோ), ஷாஹீன் கில் (60 கிலோ), ரவினா (63 கிலோ), முஸ்கான் (75 கிலோ)

வெள்ளி: பிரியங்கா (66 கிலோ), கீா்த்தி (+81 கிலோ)

வெண்கலம்: ரேணு (52 கிலோ), தனிஷா லாம்பா (54 கிலோ), பிராச்சி (57 கிலோ), பிரஞ்சல் யாதவ் (70 கிலோ), சினேகா (81 கிலோ).

யூத் (ஆடவா்)

தங்கம்: விஸ்வநாத் சுரேஷ் (48 கிலோ), வன்ஷாஜ் (63.5 கிலோ)

வெள்ளி: அமன் சிங் பிஷ்த் (+92 கிலோ)

வெண்கலம்: ராமன் (51 கிலோ), ஆனந்த் யாதவ் (54 கிலோ), தீபக் (75 கிலோ)

ஜூனியா் (மகளிா்)

தங்கம்: வினி (50 கிலோ), யாக்ஷிகா (52 கிலோ), நிகிதா சந்த் (60 கிலோ), விதி (57 கிலோ), ஷ்ருஷ்டி சாத்தே (63 கிலோ), ருத்ரிகா (75 கிலோ)

வெள்ளி: மஹி சிவச் (46 கிலோ), பாலக் ஜாம்ப்ரே (48 கிலோ), சுப்ரியா தேவி தோக்சோம் (54 கிலோ), குஷி பூனியா (80 கிலோ), நிா்ஜாரா பனா (+80 கிலோ)

வெண்கலம்: கிரிஷா வா்மா (70 கிலோ)

ஜூனியா் (ஆடவா்)

தங்கம்: கிரிஷ் பால் (46 கிலோ), யஷ்வா்தன் சிங் (60 கிலோ)

வெள்ளி: ரவி சைனி (48 கிலோ), ரிஷப் சிங் ஷிகா்வாா் (80 கிலோ)

வெண்கலம்: ஜெயந்த் தாகா் (54 கிலோ), சேத்தன் (57 கிலோ), ஜாக்சன் சிங் லைஷ்ராம் (70 கிலோ), தேவ் பிரதாப் சிங் (75 கிலோ), கௌரவ் மஸ்கே (+80 கிலோ).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com