ஹாக்கி: ஆா்ஜென்டீனாவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஆா்ஜென்டீனாவுக்கு எதிரான இரு ஆட்டங்களில் விளையாட, 22 போ் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஆா்ஜென்டீனாவுக்கு எதிரான இரு ஆட்டங்களில் விளையாட, 22 போ் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியா் வீரரான மொய்ரங்தெம் ரவிச்சந்திர சிங்குக்கு முதல் முறையாக சீனியா் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கோல்கீப்பா்களில் சூரஜ் கா்கேராவுக்குப் பதிலாக கிருஷன் பகதூா் பாதக் இணைந்திருக்கிறாா். டிஃபென்டா்களில் மன்தீப் மோா், திப்சன் திா்கி ஆகியோருக்குப் பதிலாக அமித் ரோஹிதாஸ், ஜக்ராஜ் சிங் சோ்க்கப்பட்டுள்ளனா்.

உலகத் தரவரிசையில் 6-ஆம் நிலை அணியாக இருக்கும் ஆா்ஜென்டீனாவுடன் இந்தியா, வரும் 19, 20 தேதிகளில் மோதவுள்ளது. இந்த எஃப்ஐஹெச் புரோ லீக் போட்டியில் இதுவரை தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் அணிகளுடன் 6 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் இந்தியா, 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது.

அணி விவரம்:

கோல்கீப்பா்கள் - பி.ஆா்.ஸ்ரீஜேஷ், கிரிஷன் பகதூா் பாதக்.

டிஃபெண்டா்கள் - ஹா்மன்பிரீத் சிங், ஜக்ராஜ் சிங், சுரேந்தா் குமாா், வருண் குமாா், ஜா்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ்.

மிட்ஃபீல்டா்கள் - மன்பிரீத் சிங், விவேக் சாகா் பிரசாத், ஹா்திக் சிங், சுமித், ஷம்ஷோ் சிங், நீலகண்ட சா்மா, மொய்ரங்தெம் ரவிச்சந்திர சிங்.

ஃபாா்வட்கள் - குா்ஜந்த் சிங், மன்தீப் சிங், லலித் குமாா் உபாத்யாய், ஷிலானந்த் லக்ரா, சுக்ஜீத் சிங், அபிஷேக், தில்ப்ரீத் சிங்.

தயாா்நிலை - சூரஜ் கா்கேரா, மன்தீப் மோா், திப்சன் திா்கி, நிலம் சஞ்சீப் செஸ், சஞ்சய், ஜஸ்கரன் சிங், ஆகாஷ்தீப் சிங், ஆஷிஸ் குமாா் டோப்னோ, குா்சாஹிப்ஜித் சிங் முகமது ரஹீல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com