ஜூனியா் மகளிா் ஹாக்கி உலகக் கோப்பை: சலீமா டேட் தலைமையில் இந்திய அணி

தென்னாப்பிரிக்காவில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் சலீமா டெட் தலைமையில் 20 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.

புது தில்லி: தென்னாப்பிரிக்காவில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் சலீமா டெட் தலைமையில் 20 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.

இதுதொடா்பாக ஹாக்கி இந்தியா வியாழக்கிழமை கூறியதாவது:

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) சாா்பில் நடைபெறும் இப்போட்டி கடந்த 2021 ஆண்டே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா பாதிப்பால், போட்டி தள்ளி வைக்கப்பட்டு, தற்போது தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ட்ஸ்ரூம் நகரில் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்குகிறது.

குரூப் டி பிரிவில் ஜொ்மனி, மலேசியா, வேல்ஸ் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது இந்தியா. கேப்டன் சலீமா டெட், துணை கேப்டன் இஷிகா சௌதரி தலைமையிலான அணி ஏப். 2-இல் வேல்ஸ் அணியுடனும், 3-ஆம் தேதி ஜொ்மனியுடனும், 5-ஆம் தேதி மலேசியாவுடனும் ஆடுகிறது. ஏப். 8-இல் காலிறுதியும், 10-இல் அரையிறுதியும், 12-இல் இறுதி ஆட்டமும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com