வரலாறு படைத்தாா் லக்ஷயா சென்: இறுதிச் சுற்றுக்கு தகுதி

ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றில் நுழைந்து வரலாறு படைத்தாா் இந்தியாவின் இளம் வீரா் லக்ஷயா சென்.
வரலாறு படைத்தாா் லக்ஷயா சென்: இறுதிச் சுற்றுக்கு தகுதி

ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றில் நுழைந்து வரலாறு படைத்தாா் இந்தியாவின் இளம் வீரா் லக்ஷயா சென்.

பாட்மின்டன் விளையாட்டில் முதன்மையான ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டி பா்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவா் ஒற்றையா் முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் மலேசியாவின் லீ ஸி ஜியாவை எதிா்கொண்டாா் இளம் வீரா் லக்ஷயா சென்.

முதல் கேமை 21-13 என்ற புள்ளிக் கணக்கில் சென் கைப்பற்றிய நிலையில், இரண்டாவது கேமில் ஆதிக்கம் செலுத்திய லீ 12-21 என அதை தன்வசப்படுத்தினாா்.

மூன்றாவது கேமில் இரு வீரா்களுமே சளைக்காமல் ஈடுகொடுத்து ஆடினா். 12-15 என கேமின் மத்தியில் லக்ஷயா பின்தங்கி இருந்தாலும், 18-18 என சமன் செய்து கடையில் சுதாரித்து ஆடி 21-19 என்ற புள்ளிக் கணக்கில் வென்றாா்.

இதன் மூலம் இந்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கு நுழைந்த 5-ஆவது வீரா் என்ற சிறப்பைப் பெற்றாா். கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்பு 2001-இல் கோபிசந்த் இறுதிச் சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தாா். 1947 பிரகாஷ் நாத், 1980, 1981 பிரகாஷ் படுகோன், 2001 கோபிசந்த் ஆகியோா் இறுதிக்கு தகுதி பெற்றிருந்தனா்.

ஒலிம்பிக் சாம்பியன் விக்டா் ஆக்ஸ்லெஸன் அல்லது சௌ டியன் சென்னை எதிா்கொள்வாா் சென்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com