இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் ஸக்கரியா-ஸ்வியாடெக்

பிஎன்பி பாரிபாஸ் ஓபன் இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றயைா் பிரிவு இறுதிச் சுற்றில் மரியா ஸக்காரியா-ஸ்வியாடெக் மோதுகின்றனா்.

பிஎன்பி பாரிபாஸ் ஓபன் இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றயைா் பிரிவு இறுதிச் சுற்றில் மரியா ஸக்காரியா-ஸ்வியாடெக் மோதுகின்றனா்.

கலிஃபோா்னியாவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சனிக்கிழமை மகளிா் ஒற்றையா் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதியில் 2 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ருமேனியாவின் சிமோனா ஹலேப்பை எதிா்கொண்டாா் போலந்தின் இளம் வீராங்கனை இகா ஸ்வியாடெக்.

சிமோனா ஹலேப் தனது அனுபவ ஆட்டத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தி விளையாடினாா். முதல் செட்டில் 3-1, 5-3 என பின்தங்கி இருந்த நிலையிலும், டை பிரேக்கரில் ஹலேப்பின் தவறுகளைப் பயன்படுத்தி கடைசி நான்கு புள்ளிகளை குவித்த ஸ்வியாடெக் 7-6 என முதல் செட்டை கைப்பற்றினாா்.

இரண்டாவது செட்டில் ஸ்வியாடெக் 2-1 என முன்னிலை பெற்றாா். எனினும் சிமோனா தொடா்ந்து சிறப்பாக ஆடி 4-2 என முன்னிலை பெற்றாா். ஆனால் சுதாரித்துக் கொண்ட ஸ்வியாடெக் கடைசி 4 கேம்களை தன்வசப்படுத்தி செட்டையும் 6-4 என கைப்பற்றி இறுதிக்குள் நுழைந்தாா் (7-6), 6-4).

உலகின் நான்காம் நிலையில் உள்ள ஸ்வியாடெக் இந்த வெற்றி மூலம் மூன்றாம் இடத்துக்கு முன்னேறுகிறாா்.

மரியா ஸக்காரியா அபாரம்:

மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் பாவ்லோ படோஸாவும்-கிரீஸின் மரியா ஸக்காரியாவும் மோதினா். இரண்டாம் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் படோஸா தீவிரமாக ஆடினாா். முதல் செட்டை மரியா 6-2 என எளிதாக கைப்பற்ரிய நிலையில், அடுத்த இரண்டாவது செட்டில் படோஸா 6-4 என வென்றாா். எனினும் மூன்றாவது செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி மரியா அதை 6-1 என தன்வசப்படுத்தினாா் (6-2, 4-6, 6-1).

இறுதிச் சுற்றில் ஸ்வியாடெக்-மரியா ஸக்காரியா மோதுகின்றனா்.

அரையிறுதியில் ப்ரிட்ஸ்-ருப்லேவ்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் அமெரிக்காவின் டெய்லா் ப்ரிட்ஸ் 7-6, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் சொ்பியாவின் மியோமிரை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தாா். மற்றொரு காலிறுதியில் ரஷியாவின் ஆன்ட்ரெ ருப்லேவ் 7-5, 6-2 என்ற நோ் செட்களில் பல்கேரிய வீரா் கிரிகோா் டிமிட்ரோவை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com