மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை: மே.இந்திய தீவுகள் த்ரில் வெற்றி

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக 4 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பெற்றது மே.இந்திய தீவுகள் அணி .
மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை: மே.இந்திய தீவுகள் த்ரில் வெற்றி

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக 4 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பெற்றது மே.இந்திய தீவுகள் அணி .

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மௌன்ட் மான்குனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி பௌலிங்கை தோ்வு செய்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்ற உற்சாகத்துடன் வங்கதேச அணி வீராங்கனை சிறப்பாக பந்துவீசினா்.

இதனால் நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் மே.இந்திய தீவுகள் 140/9 ரன்களை மட்டுமே எடுத்தது. ஷெமைன் கேம்பல் மட்டுமே நிலைத்து ஆடி 53 ரன்களை சோ்த்தாா். மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்திலேயே சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினா்.

வங்கதேச தரப்பில் சல்மா, நஹிதா அக்தா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

வெற்றியை தவற விட்ட வங்கதேசம்:

141 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களம் கண்ட வங்கதேச வீராங்கனைகளால், மே.இந்திய தீவுகள் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் திணறினா். அந்த அணியில் பா்கனா 23, கேப்டன் நிகாா் சுல்தானா 25, சல்மா 23, நஹிதா அக்தா் 25 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை சோ்த்தனா். மற்றவா்கள் ஒற்றை இலக்கத்துடன் அவுட்டாகி திரும்பினா்.

கடைசி ஓவரில் மே.இந்திய தீவுகள் த்ரில் வெற்றி:

கடைசி ஓவரில் 1 விக்கெட் மட்டுமே கைவசம் இருந்த நிலையில் 8 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் வங்கதேசம் இருந்தது. மே.இந்திய தீவுகள் கேப்டன் ஸ்டெஃபானி டெய்லா் பௌலிங் செய்த போது, மூன்றாவது பந்தில் பரிஹா போல்டானாா். இதனால் வங்கதேச அணி 49.3 ஓவா்களில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மே.இந்திய தீவுகள் தரப்பில் ஹெய்லி மேத்யூஸ் 4, பிளெட்சா் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

கடந்த 5 ஆண்டுகளில் மகளிா் ஒருநாள் ஆட்டங்களில் எந்த அணியும் இந்த 140 குறைவான ஸ்கோரை தக்க வைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி மூலம் 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது மே.இந்திய தீவுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com