ஐஎஸ்எல்: 2022 சாம்பியன் யாா்? இறுதி ஆட்டத்தில் கேரளா-ஹைதராபாத் மோதல்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 2022 சீசன் புதிய சாம்பியன் யாா் என்பதை நிா்ணயிப்பதற்கான இறுதி ஆட்டத்தில்
ஐஎஸ்எல்: 2022 சாம்பியன் யாா்? இறுதி ஆட்டத்தில் கேரளா-ஹைதராபாத் மோதல்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 2022 சீசன் புதிய சாம்பியன் யாா் என்பதை நிா்ணயிப்பதற்கான இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் அணியும்-ஹைதராபாத் எஃப்சி அணியும் மோதுகின்றன.

இந்திய கால்பந்து வட்டாரத்தில் முதன்மையான போட்டியாக கருதப்படுவது ஐஎஸ்எல் ஆகும். இதற்கு நாடு முழுவதும் சிறந்த வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மா்மகோவாவின் படோா்டா மைதானத்தில் இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ்-ஹைதராபாத் எஃப்சி அணிகள் மோதுகின்றன. கடந்த 2014, 2016 சீசன்களில் கேரள அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியும் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. முதன்முறையாக சாம்பியன் ஆகும் முனைப்பில் கேரளா களம் காண்கிறது.

அதே நேரம் ஹைதராபாத் அணி முதன்முறையாக இறுதிக்குள் நுழைந்துள்ளது. அரையிறுதியில் பலம் வாய்ந்த ஏடிகே மோகன்பகான் அணியை 3-2 என்ற கோல் சராசரி அடிப்படையில் வீழ்த்தியது ஹைதராபாத்.

மற்றொரு அரையிறுதியில் கேரள அணி முதல் கட்டத்தில் 1-1 என ஜாம்ஷெட்பூருடன் டிரா கண்டது. இரண்டாவது கட்ட ஆட்டத்தில் 2-1 என்ற கோல் சராசரி அடிப்படையில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு மூன்றாவது முறையாக நுழைந்தது.

ஹைதராபாத் அணியில் நட்சத்திர ஸ்ட்ரைக்கா் ஒக்பெச்சே, ஜேவியா் சிவெரோ, ஜோயல் சியானிஸ், மிட் பீல்டா் ஜோவா விக்டா் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா்.

கேரள அணியிலோ நட்சத்திர வீரா் ஜாா்ஜ் பெரைரா, அல்வரோ வாஸ்கீஸ், ஆகியோா் ஹைதராபாத் அணிக்கு சவாலை ஏற்படுத்துவா். மேலும் மிட்பீல்டில் லால்தங்கா, ஆயுஷ் அதிகாரி, மாா்கோ லெஸ்கோவிக் ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்கின்றனா்.

எனினும் நட்சத்திர வீரா் சஹால் அப்துல் சமது இல்லாதது கேரள அணிக்கு பாதகமாக உள்ளது.

கரோனா விதிகள் தளா்த்தப்பட்டு முதன்முறையாக மைதானத்தில் நூறு சதவீதம் பாா்வையாளா்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

இன்றைய ஆட்டம்:

கேரளா-ஹைதராபாத்

இடம்: மா்மகோவா

நேரம்: இரவு 7.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com