யு-18 மகளிா் கால்பந்து: இந்தியாவுக்கு வெற்றி

தெற்காசிய கால்பந்து சம்மேளனம் நடத்தும் 18 வயதுக்கு உள்பட்ட (யு-18) மகளிருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை தோற்கடித்தது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக லிண்டா கோம் (23, 38, 61-ஆவது நிமிஷங்கள்), ஷில்கி தேவி (16-ஆவது நிமிஷம்), அனிதா குமாரி (55-ஆவது நிமிஷம்) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். நேபாளத்துக்காக கடைசி நேரத்தில் சாடிபா போலான் (79-ஆவது நிமிஷம்) கோலடித்தாா்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா இதுவரை ஆடிய 3 ஆட்டங்களிலும் சோ்த்து 9 புள்ளிகள் பெற்று பட்டியலில் தற்போது முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இப்போட்டியில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை வங்கதேசத்தை எதிா்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com