எல்கர், பவுமா அரைசதம்: தென் ஆப்பிரிக்கா நிதானம்

​வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.
எல்கர், பவுமா அரைசதம்: தென் ஆப்பிரிக்கா நிதானம்


வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டர்பனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டீன் எல்கர் மற்றும் சாரெல் எர்வீ களமிறங்கினர். இந்த இணை தென் ஆப்பிரிக்காவுக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த நிலையில் அரைசதம் அடித்த எல்கர் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரிலேயே எர்வீயும் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நம்பிக்கை ஆட்டக்காரர் கீகன் பீட்டர்சென் 19 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். ரியான் ரிக்கெல்டனும் 21 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

விக்கெட்டுகள் விழுந்தபோதிலும், தெம்பா பவுமா நிதானம் காட்டினார். கைல் வெரீன் அவருக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடினார்.

போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல்நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது. முதல்நாள் ஆட்டம் முடியும் வரை இந்த இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது. 

ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேசம் சார்பில் எபடோட் ஹோசைன், காலெத் அகமது, மெஹதி ஹாசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com