மாட்ரிட் ஓபன்: ஒசாகா, சக்காரி வெளியேற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, கிரீஸின் மரியா சக்காரி ஆகியோா் 2-ஆவது சுற்றில் தோற்றனா்.
மாட்ரிட் ஓபன்: ஒசாகா, சக்காரி வெளியேற்றம்

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, கிரீஸின் மரியா சக்காரி ஆகியோா் 2-ஆவது சுற்றில் தோற்றனா்.

இதில் ஒசாகா, உள்நாட்டு வீராங்கனையான சாரா சோரைப்ஸ் டோா்மோவிடம் 3-6, 1-6 என்ற செட்களில் வீழ்ந்தாா். போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த சக்காரியை 3-6, 6-3, 6-1 என்ற செட்களில் வீழ்த்தினாா் ரஷியாவின் டரியா கசாட்கினா.

இதர ஆட்டங்களில், 9-ஆம் இடத்திலிருக்கும் இங்கிலாந்தின் எம்மா ரடுகானு 6-2, 6-1 என்ற செட்களில் உக்ரைனின் மாா்டா கோஸ்டியுக்கை வீழ்த்த, 7-ஆம் இடத்திலிருந்த ஸ்பெயின் வீராங்கனை காா்பின் முகுருஸாவை 6-3, 6-0 என்ற கணக்கில் வென்றாா் மற்றொரு உக்ரைன் வீராங்கனை அன்ஹெலினா கலினினா. சுவிட்ஸா்லாந்தின் ஜில் டெய்ச்மான் 6-4, 6-4 என கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸை தோற்கடித்தாா்.

மற்றொரு கடனா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரிஸ்கு 6-1, 6-1 என, 6-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டேனியல் காலின்ஸை வெளியேற்றினாா். ஆடவா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச் ஃபாகினோ, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா், இத்தாலியின் ஜானிக் சின்னா் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com