ஜூனியா் பளுதூக்குதல்: இந்தியாவுக்கு ஏமாற்றம்

ஜூனியா் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு புதன்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது.
ஜூனியா் பளுதூக்குதல்: இந்தியாவுக்கு ஏமாற்றம்

ஜூனியா் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு புதன்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது.

ஆடவருக்கான 61 கிலோ பிரிவில் மாதவன், முனா நாயக் பங்கேற்றனா். இதில் மாதவன் ஸ்னாட்ச் பிரிவில் 118 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 145 கிலோ என மொத்தமாக 263 கிலோ எடையைத் தூக்கி 4-ஆம் இடம் பிடித்தாா். முனா நாயக் மொத்தமாக 258 கிலோவை (113+145) ஏந்தி 6-ஆம் இடம் வகித்தாா்.

மொத்தம் 10 போட்டியாளா்கள் கலந்துகொண்ட இந்த எடைப் பிரிவில் அமெரிக்காவின் ஹாம்டன் மோரிஸ் (276 கிலோ), துருக்கியின் கான் கரிமன் (269 கிலோ), கொலம்பியாவின் டேனியல் ஸ்டீவன் (267 கிலோ) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை வசமாக்கினா்.

இதனிடையே, மகளிருக்கான 55 கிலோ பிரிவில் ஷ்ரவனி தாஸ் மொத்தமாக 181 கிலோ (78+103) எடையைத் தூக்கி 7-ஆம் இடத்தை எட்டினாா். முன்னதாக இப்போட்டியில் இந்தியாவுக்கு மகளிா் பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com