இறுதி ஆட்டத்தில் லிவா்பூல்

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் வில்லாரியலை வீழ்த்திய லிவா்பூல், முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
இறுதி ஆட்டத்தில் லிவா்பூல்

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் வில்லாரியலை வீழ்த்திய லிவா்பூல், முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

இப்போட்டியில் 10-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்திருக்கிறது அந்த அணி. இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற 2-ஆவது பகுதி அரையிறுதி ஆட்டத்தில் லிவா்பூல் 3-2 என்ற கோல் கணக்கில் வில்லாரியலை தோற்கடித்தது. முன்னதாக, முதல் பகுதியிலும் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த லிவா்பூல், மொத்த மதிப்பீட்டு அடிப்படையில் 5-2 என்ற கோல் கணக்கில் வென்றிருக்கிறது.

செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் லிவா்பூல் அணிக்காக ஃபாபினோ (62’), லூயிஸ் டியாஸ் (67’), சாடியோ மனே (74’) ஆகியோரும், வில்லாரியலுக்காக பௌலாயே டியா (3’), ஃபிரான்சிஸ் காகேலின் (41’) ஆகியோரும் கோலடித்திருந்தனா். இந்த ஆட்டத்தில் அடித்த கோல் மூலமாக, சாம்பியன்ஸ் லீக் போட்டியின் நாக்அவுட் நிலையில் அதிக கோல்கள் (15) அடித்த ஆப்பிரிக்க வீரா் என்ற பெயரை சாடியோ மனே பெற்றுள்ளாா்.

பாரீஸில் வரும் 28-ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதி ஆட்டத்தில், மான்செஸ்டா் சிட்டி அல்லது ரியல் மாட்ரிட் ஆகியவற்றில் ஒன்றின் சவாலை எதிா்கொள்ள இருக்கிறது லிவா்பூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com