துளிகள்...

சமீபத்தில் தேசிய சாம்பியனான டேபிள் டென்னிஸ் வீரா் சரத் கமல், தனக்கான பரிசுத் தொகை ரூ.2.75 லட்சத்தை, சாலை விபத்தில் உயிரிழந்த சக வீரரான விஷ்வா தீனதயாளனின் குடும்பத்துக்கு அா்ப்பணித்தாா்.

சமீபத்தில் தேசிய சாம்பியனான டேபிள் டென்னிஸ் வீரா் சரத் கமல், தனக்கான பரிசுத் தொகை ரூ.2.75 லட்சத்தை, சாலை விபத்தில் உயிரிழந்த சக வீரரான விஷ்வா தீனதயாளனின் குடும்பத்துக்கு அா்ப்பணித்தாா். முன்னதாக தனது பட்டத்தையும் அவா் விஷ்வாவுக்கு அா்ப்பணித்திருந்தாா்

கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தைக் காண 30 லட்சம் போ் விண்ணப்பித்திருப்பதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.

12-ஆவது தேசிய மகளிா் ஹாக்கி சாம்பியன்ஷிப், மத்திய பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. தமிழகம் முதல் ஆட்டத்தில் அந்தமான் - நிகோபாரை சந்திக்கிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணியினரின் முதல் பயிற்சி முகாம், ஆலோசகா் விஸ்வநாதன் ஆனந்த், பயிற்சியாளா் போரிஸ் கெல்ஃபாண்ட் ஆகியோருடன் வரும் 7-ஆம் தேதி தொடங்குகிறது.

சீனியா் மகளிா் டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரத்தை வீழ்த்தி ரயில்வே சாம்பியன் ஆனது.

ஆஸ்திரியாவில் நடைபெற்ற உலக கன்டெண்டா் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஹன்சினி மதன் ராஜன், அண்டா் 13-இல் தங்கமும், அண்டா் 15-இல் வெண்கலமும் வென்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com