முகப்பு விளையாட்டு செய்திகள்
டெஸ்டில் இனி ஜோ ரூட் நம்பர் 3இல் விளையாடமாட்டார் - கேப்டன் உறுதி
By DIN | Published On : 08th May 2022 04:47 PM | Last Updated : 08th May 2022 04:47 PM | அ+அ அ- |

new skipper and former skipper
லண்டன்: இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் இனிவரும் டெஸ்டுகளில் நம்பர் 4இல் விளையாடுவார் என இங்கிலாந்தின் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருக்கிறார்.
"ரூட் அவர்கள் எந்த இடத்தில் களமிறங்கினாலும் நன்றாக விளையாடுவார். ஆனால் 4ஆவது இடம் அவருக்கு சிறப்பாக இருக்கும். தற்போதைய சராசரி 60ஆக இருந்தாலும் நெ.4ல் விளையாடினால் சராசரி 90 ஆக மாறும். அவர் 4லும் நான் 6வது இடத்திலும் களமிறங்கினால் அணிக்கு வலுவாக இருக்கும் என்று கருதுகிறேன்" என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.
இங்கிலாந்து, நியூசிலாந்து அணியுடன் வரும் ஜூன் 2ல் முதல் டெஸ்ட் விளையாட இருக்கிறது.