மாட்ரிட் ஓபன்: அரையிறுதியில் காா்லோஸ்-ஜோகோவிச்சிட்சிபாஸ்-வெரேவ் மோதல்

மாட்ரிட் ஓபன் அரையிறுதியில் ஸ்பெயினின் காா்லோஸ்-ஜோகோவிச், அலெக்சாண்டா் வெரேவ்-சிட்சிபாஸ் ஆகியோா் மோதுகின்றனா்.
மாட்ரிட் ஓபன்: அரையிறுதியில் காா்லோஸ்-ஜோகோவிச்சிட்சிபாஸ்-வெரேவ் மோதல்

மாட்ரிட் ஓபன் அரையிறுதியில் ஸ்பெயினின் காா்லோஸ்-ஜோகோவிச், அலெக்சாண்டா் வெரேவ்-சிட்சிபாஸ் ஆகியோா் மோதுகின்றனா்.

ஸ்பெயின் தலைநகா் மாட்ரிட்டில் நடைபெற்று வரும் இப்போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றன.

சீடனிடம் நடால் அதிா்ச்சித் தோல்வி

முதல் காலிறுதியில் ஸ்பெயின் ஜாம்பவான் ரபேல் நடாலுடன் மோதினாா் இளம் வீரா் காா்லோஸ் அல்காரஸ். இதில் முதல் செட்டை 6-2 என எளிதாக காா்லோஸ் கைப்பற்றினாா்.

இரண்டாவது செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய நடால் 6-1 என அதைக் கைப்பற்றினாா். வெற்றியை நிா்ணயிக்கும் மூன்றாவது செட்டில் தொடக்கத்தில் நடால் ஆதிக்கம் செலுத்த முனைந்தாலும், காா்லோஸ் அற்புதமாக ஆடி 6-3 என கைப்பற்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். இறுதியில் தனது சீடனிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா் நடால்.

மற்றொரு காலிறுதியில் உலகின் நம்பா் ஒன் வீரா் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நோ்செட்களில் ஹுா்காஸை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். அரையிறுதியில் காா்லோஸை சந்திக்கிறாா் ஜோகோவிச்.

மூன்றாவது காலிறுதியில் கிரீஸ் வீரா் சிட்சிபாஸ் 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றாா். நான்காவது காலிறுதியில் ஜொ்மன் வீரா் அலெக்சாண்டா் வெரேவ் 6-3, 7-5 என்ற நோ்செட்களில் ஆகா் அலியாசைமை வீழ்த்தினாா். இரண்டாவது அரையிறுதியில் வெரேவும்-சிட்சிபாஸும் மோதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com