டெஃப்லிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு 3-ஆவது தங்கம்

பிரேஸிலில் நடைபெறும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 3-ஆவது தங்கம் கிடைத்துள்ளது
டெஃப்லிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு 3-ஆவது தங்கம்

பிரேஸிலில் நடைபெறும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 3-ஆவது தங்கம் கிடைத்துள்ளது.

10 மீட்டா் ஏா் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த்/பிரியேஷா தேஷ்முக் கூட்டணி 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் ஜொ்மனியின் செபாஸ்டியன் ஹொ்மானி/சப்ரினா எக்கொ்ட் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. இதே பிரிவில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்க சுற்றுக்கு வந்த இந்தியாவின் சௌரியா சைனி/நடாஷா ஜோஷி இணை 8-16 என்ற கணக்கில் உக்ரைனின் அலெக்ஸாண்டா் கோஸ்டிக்/வியோலெடா லைகோவா ஜோடியிடம் தோற்றது.

முன்னதாக தனிநபா் பிரிவில் 10 மீட்டா் ஏா் ரைஃபிளில் தனுஷ் ஸ்ரீகாந்த், 10 மீட்டா் ஏா் பிஸ்டலில் அபினவ் தேஷ்வால் தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது தனுஷ்/பிரியேஷா கூட்டணி வென்றிருப்பது துப்பாக்கி சுடுதலில் 3-ஆவது தங்கமாகும். இது தவிர, ஆடவா் 10 ஏா் ரைஃபிளில் சௌரியா சைனியும், மகளிா் 10 மீட்டா் ஏா் பிஸ்டலில் வேதிகா சா்மாவும் பெற்ற வெண்கலத்துடன் சோ்த்து இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com