தைரியமானவர்களுக்கே வெற்றி கிடைக்கிறது : கவாஸ்கர் எந்த அணியை குறிப்பிடுகிறார்?
By DIN | Published On : 10th May 2022 03:34 PM | Last Updated : 11th May 2022 12:58 PM | அ+அ அ- |

gavaskar
மும்பை: 15வது ஐபிஎல் தொடரின் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் பயமே இல்லாமல் ஆடுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டி பேசினார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரலையில் சுனில் கவாஸ்கர் பேசியதாவது:
விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் ஆனால் தோற்றால் உலகமே அழிந்து போய்விடுவதில்லை என்பதை புரிந்து கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்கள் குஜராத் அணியினர். மேலும் சுதந்திரமாக பயமே இல்லாமல் ஆடுகின்றனர். அதனாலேயே அவரகள் வெற்றி பெறுகிறார்கள்.
இந்த வருட ஐபிஎல்இல் 16 புள்ளிகள் பெற்று முதல் அணியும் இதுவே.