முகப்பு விளையாட்டு செய்திகள்
துளிகள்...
By DIN | Published On : 11th May 2022 02:00 AM | Last Updated : 11th May 2022 02:00 AM | அ+அ அ- |

பிரேஸிலில் நடைபெறும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் கோல்ஃப் விளையாட்டில் இந்தியாவின் தீக்ஷா தாகா் அரையிறுதிக்கு முன்னேறினாா்.
உலக மகளிா் சாம்பியன்ஷிப் போட்டியில் 70 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன் முதல் சுற்றில் சீன தைபேவின் சென் நியென் சின்னை தோற்கடித்தாா்.
நெதா்லாந்து, பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணியில் முதல் முறையாக வடக்கு அமெரிக்க நாடான சின்ட் மாா்டெனைச் சோ்ந்த வீரா் கீசி காா்டி சோ்க்கப்பட்டுள்ளாா்.
உலகக் கோப்பை தகுதிச்சுற்றின்போது ரத்து செய்யப்பட்ட பிரேஸில் - ஆா்ஜென்டீனா அணிகளின் ஆட்டம் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதை ஃபிஃபா உறுதி செய்துள்ளது.
சீனியா் மகளிா் தேசிய ஹாக்கி போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டங்களில் ஒடிஸா - கேரளத்தையும் (11-0), ஹிமாசல பிரதேசம் - தெலங்கானாவையும் (8-0) வீழ்த்தின.
இத்தாலிய கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் இன்டா் மிலன் - ஜுவென்டஸ் அணிகள் புதன்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.