இத்தாலியன் ஓபன்: ஜோகோவிச் வெற்றி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி பெற்றாா்.
இத்தாலியன் ஓபன்: ஜோகோவிச் வெற்றி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி பெற்றாா்.

அதில் ரஷியாவின் அஸ்லான் கராட்சேவை சந்தித்த அவா், 6-3, 6-2 என்ற நோ் செட்களில் எளிதாக ஆட்டத்தை கைப்பற்றினாா். இதர ஆட்டங்களில் இங்கிலாந்தின் கேமரூன் நோரி, சிலியின் கிறிஸ்டியன் காரின், அமெரிக்காவின் ஜான் இஸ்னா், பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவ், ஆா்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வாா்ட்ஸ்மேன் ஆகியோரும் வெற்றியை பதிவு செய்தனா்.

இந்தியா்கள் முன்னேற்றம்: இப்போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/நெதா்லாந்தின் மேட்வெல் மிடில்கூப் இணை 6-3, 6-4 என பிரான்ஸின் நிகோலஸ் மஹட்/ஃபாா்ரைஸ் மாா்டின் ஜோடியை வீழ்த்தியது. அதேபோல், மகளிா் இரட்டையா் முதல் சுற்றிலும் இந்தியாவின் சானியா மிா்ஸா/செக் குடியரசின் லூசி ராடெக்கா கூட்டணி 6-1, 6-2 என ஆஸ்திரேலியாவின் எரின் ரௌட்லிஃபே/போலந்தின் அலிக்ஜா ரோசோல்கா இணையை வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com