முகப்பு விளையாட்டு செய்திகள்
சர்வதேசத் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை
By DIN | Published On : 11th May 2022 05:46 PM | Last Updated : 11th May 2022 05:46 PM | அ+அ அ- |

சைப்ரஸில் நடைபெற்ற சர்வதேசத் தடகளப் போட்டியில் 100 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை ஜோதி யாரஜ்ஜி.
2002-ல் 100 மீ. தடை தாண்டும் ஓட்டத்தை இந்தியாவின் அனுராதா பிஸ்வால் 13.38 நொடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார். கடந்த 20 வருடங்களாக அவருடைய சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. இந்நிலையில் சைப்ரஸில் நடைபெற்ற சர்வதேசத் தடகளப் போட்டியில் 100 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யாரஜ்ஜி தங்கம் வென்றுள்ளார். அவர் 13.23 நொடிகளில் தூரத்தைக் கடந்து புதிய தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
22 வயது ஜோதி, ஆந்திராவைச் சேர்ந்தவர்.
Heartiest congratulations to
— SAI Media (@Media_SAI) May 11, 2022
Jyothi Yarraji on breaking the 20 year old #NationalRecord of
Anuradha Biswal (13.38/ 2002)
in women's 100m hurdles
Jyothi clocked 13.23 (subject to ratification) to set the New NR & win Gold at Cyprus International #IndianSports #Athletics pic.twitter.com/eiHgGQEIei