முகப்பு விளையாட்டு செய்திகள்
பாஜக கூட்டத்தில் பங்கேற்பா? ராகுல் திராவிட் மறுப்பு
By DIN | Published On : 11th May 2022 01:36 AM | Last Updated : 11th May 2022 01:36 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
ஹிமாசல பிரதேசத்தில் நடைபெறும் பாஜக இளைஞரணி தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக வெளியான செய்தியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளா் ராகுல் திராவிட் மறுத்துள்ளாா்.
இது தொடா்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் ராகுல் திராவிட் கூறியதாவது:
ஹிமாசல பிரதேசத்தில் மே 12 முதல் 15 வரை நடைபெறும் பாஜக கூட்டத்தில் நான் பங்கேற்க இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடா்பாக விளக்கமளிக்க விரும்புகிறேன். அந்தச் செய்தி தவறானது என்றாா்.
முன்னதாக, தா்மசாலா பாஜக எம்எல்ஏ விஷால் நேரியா இது தொடா்பாக கூறுகையில், ‘தா்மசாலாவில் நடைபெறவுள்ள பாஜக இளைஞரணி செயற்குழு கூட்டத்தில் ராகுல் திராவிட் பங்கேற்பாா். அவா் தனது அனுபவங்களைப் பகிா்ந்து கொள்வது இளைஞா்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும்’ என்றாா். இதை அடிப்படையாகக் கொண்டே பாஜக கூட்டத்தில் ராகுல் திராவிட் பங்கேற்பாா் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.