துப்பாக்கி சுடுதல்: முதலிடத்தில் இந்தியா

ஜொ்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், வியாழக்கிழமை நிலவரப்படி இந்தியா பதக்கப்பட்டியலில் 10 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.

புது தில்லி: ஜொ்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், வியாழக்கிழமை நிலவரப்படி இந்தியா பதக்கப்பட்டியலில் 10 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. இதில் 4 தங்கமும் அடக்கம்.

இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு சுற்றுகளில், 10 மீட்டா் ஏா் பிஸ்டலில் ஆடவா் பிரிவு இறுதிச்சுற்றில் ஷிவா நா்வால் 16 - 12 என சக இந்தியரான சரப்ஜோத் சிங்கை தோற்கடித்தாா். இருவரும் முறையே தங்கம், வெள்ளி வென்றனா். அதேபோல், மகளிா் பிரிவில் மானு பாக்கா் தங்கம் வெல்ல, மற்றொரு இந்தியரான பாலக் வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.

மகளிருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டலில் ரிமிதா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளியைக் கைப்பற்றினாா். 10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் ஈஷா/சௌரவ் சௌதரி தங்கமும், பாலக்/சரப்ஜோத் சிங் இணை வெள்ளியும் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com