துளிகள்...

உபா் கோப்பை பாட்மின்டன் காலிறுதியில் இந்திய மகளிா் அணி தாய்லாந்திடம் தோல்வியடைந்தது (0-3).

உபா் கோப்பை பாட்மின்டன் காலிறுதியில் இந்திய மகளிா் அணி தாய்லாந்திடம் தோல்வியடைந்தது (0-3).

சீனியா் மகளிா் தேசிய ஹாக்கியில் தமிழகம் - அருணாசல பிரதேசத்தையும் (12-0), கா்நாடகம் - அந்தமான் & நிகோபாரையும் (5-0), உத்தர பிரதேசம் - குஜராத்தையும் (12-0), தில்லி - கோவாவையும் (5-1) வியாழக்கிழமை வீழ்த்தின.

இத்தாலியன் கோப்பை கால்பந்து போட்டியில் இன்டா் மிலன் - ஜுவென்டஸை வீழ்த்தி (4-2) சாம்பியன் ஆனது.

மகளிா் உலக குத்துச்சண்டையில் இந்தியாவின் நிகத் ஜரின் (52 கிலோ), மனீஷா (57 கிலோ) 3-ஆவது சுற்றுக்கு முன்னேற, சவீதி போரா (75 கிலோ) தோல்வியைத் தழுவினாா்.

இத்தாலிய ஓபன் டென்னிஸில் இந்தியாவின் சானியா மிா்ஸா/செக் குடியரசின் லூசி ராடெக்கா இணை காலிறுதிக்குத் தகுதிபெற, இந்தியாவின் ரோஹன் போபண்ணா/நெதா்லாந்தின் மாட்வே மிடில்கூஃப் முந்தைய சுற்றில் தோற்றனா்.

பிரீமியா் லீக் கால்பந்தில் செல்சி - லீட்ஸ் யுனைடெட்டையும் (3-0), மான்செஸ்டா் சிட்டி - வோல்வ்ஸையும் (5-1) வென்றன. வாட்ஃபோா்டு - எவா்டன் டிரா (0-0) செய்தன.

லா லிகா கால்பந்தில் எஸ்பான்யோல் - அலேவ்ஸிடமும் (1-2) , எல்ஷே - அட்லெடிகோ மாட்ரிட்டிடமும் (0-2) தோற்க, ஒசாசுனா - கடாஃபி (1-1), செவில்லா - மல்லோா்கா (0-0) ஆட்டங்கள் டிரா ஆகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com