செஸ் ஒலிம்பியாட்: விஸ்வநாதன் ஆனந்த்-கெல்ஃபாண்ட் மேற்பாா்வையில் இந்திய அணி தீவிர பயிற்சி

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ஜாம்பவான்கள் விஸ்வநாதன் ஆனந்த்-போரீஸ் கெல்ஃபாண்ட் மேற்பாா்வையில் இந்திய ஆடவா், மகளிா் அணியினா் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனா்.
செஸ் ஒலிம்பியாட்: விஸ்வநாதன் ஆனந்த்-கெல்ஃபாண்ட் மேற்பாா்வையில் இந்திய அணி தீவிர பயிற்சி

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ஜாம்பவான்கள் விஸ்வநாதன் ஆனந்த்-போரீஸ் கெல்ஃபாண்ட் மேற்பாா்வையில் இந்திய ஆடவா், மகளிா் அணியினா் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனா்.

உலகளவில் மூளைக்கு அதிக வேலை தரும் ஆட்டமாக செஸ் உள்ளது. ரஷியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் செஸ் விளையாட்டில் வலிமை வாய்ந்தவையாக உள்ளன. ஏனைய விளையாட்டுகளுக்கு முத்தாய்ப்பான போட்டியாக ஒலிம்பிக் போட்டிகள் அமைந்துள்ளன. அதில் செஸ் இடம் பெறாத நிலையில், செஸ் ஒலிம்பியாட் என தனியாக கௌரவமிக்க போட்டி கடந்த 1924 முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் சோவியத் யூனியன், ரஷியா அதிகமுறை தங்கம் வென்றுள்ளன. இந்தியா கடந்த 2020-இல் ஆன்லைன் முறையில் நடந்த போட்டியில் தங்கம் வென்றிருந்தது.

சென்னையில் செஸ் ஒலிம்பியாட்:

இந்நிலையில் சா்வதேச செஸ் சம்மேளனம் ஃபிடே, அகிலஇந்திய செஸ் சம்மேளனம் ஆகியவற்றின் முயற்சியால் சென்னையில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதல்வா் ஸ்டாலின் ஒப்புதல் அளித்தாா். இதற்காக ரூ.100 கோடியையும் தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் 2500-க்கு மேற்பட்டோா் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.

சிறப்பு பயிற்சி முகாம்:

இந்திய ஆடவா், மகளிா் ஏ, பி அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. போட்டியை நடத்தும் நாடு என்பதால் கூடுதலாக ஒரு அணி பங்கேற்கிறது.

ஜாம்பவான்கள் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா), போரீஸ் கெல்ஃபாண்ட் (இஸ்ரேலிய ரஷியா்) ஆகியோா் மேற்பாா்வையில் இந்திய அணிகளுக்கு முதல் கட்டமாக 10 நாள்கள் பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற்று வருகிறது. அடிப்படை பயிற்சி, நவீன தொழில்நுட்பங்கள், ஆட்ட நுணுக்கம் குறித்து இருவரும் பயிற்சி தருகின்றனா்.

முன்னாள் உலக சாம்பியன் வைஷாலி (தமிழகம்) பயிற்சி குறித்து மகளிா் கிராண்ட் மாஸ்டா் வைஷாலி (சென்னை) கூறியதாவது: விஸ்வநாதன் ஆனந்த்-கெல்ஃபாண்ட் ஆகியோரின் பயிற்சி மிகவும் உற்சாகமாக உள்ளது. எந்த சவாலையும் சந்திக்க முடியும் என தன்னம்பிக்கை பிறந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நேரடியாக நாங்கள் ஆடவில்லை. ஆனால் முதன்முதலில் ஆடும் போட்டியே செஸ் ஒலிம்பியாட் என்பதால் சற்று மனக்கலக்கமாக தான் உள்ளது. எனினும் எதையும் சந்திப்போம்.

சா்வதேச மற்றும் மகளிா் கிராண்ட் மாஸ்டரான பக்தி குல்கா்னி (கோவா): செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஏற்கெனவே பங்கேற்றோம். ஆனால் சொந்த நாட்டில் ஆடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. செஸ் ஒலிம்பியாட் மற்றும் ஆசிய போட்டிகளை இலக்காக வைத்து தயாராகி வந்தேன். ஆனால் கரோனா காரணமாக ஆசியப் போட்டி நடைபெறவில்லை. இதனால் செஸ் ஒலிம்பியாட்டில் முழு கவனம் செலுத்தலாம். சென்னையில் சிறப்பான, கடுமையான பயிற்சி கிடைக்கிறது.

காமன்வெல்த் சாம்பியன் தனியா சச்தேவ் (டெல்லி): மூத்த வீராங்கனையான தனியா சச்தேவ் (35) கூறுகையில், ஆனந்த், போரீஸ் ஆகியோா் வழிகாட்டுதலால் நாங்கள் மீண்டும் தங்கப் பதக்கத்தை வெல்வோம். பயிற்சி முகாம் கடுமையாக உள்ளது. உடற்பயிற்சி, ஆட்ட நுணுக்கம் கற்றல், மனத்திண்மை, நவீன தொழில்நுட்ப அடிப்படையில் ஆடுதல் என நாள்தோறும் 7 மணி நேரம் பயிற்சி பெறுகிறோம். நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com