தாமஸ் கோப்பை பாட்மின்டன்: வரலாறு படைத்தது இந்தியா

தாய்லாந்தில் நடைபெறும் தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்திய ஆடவா் அணி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.
தாமஸ் கோப்பை பாட்மின்டன்: வரலாறு படைத்தது இந்தியா

தாய்லாந்தில் நடைபெறும் தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்திய ஆடவா் அணி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.

இப்போட்டியில் 1979-க்குப் பிறகு இந்தியா பதக்கம் வெல்ல இருப்பது இதுவே முதல் முறையாகும். அதற்கு முன் இன்டா் ஸோனல் ஃபைனல்ஸில் இந்தியா 3 வெண்கலம் வென்றிருந்தது. என்றாலும், இப்போட்டிக்கு தகுதிபெறும் முறை 1979-ஆம் ஆண்டு மாற்றப்பட்ட பிறகு இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருப்பது இது முதல் முறையாகும்.

இந்திய நேரப்படி, வியாழக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த காலிறுதிச்சுற்றில் இந்தியா 3-2 என்ற கணக்கில், 5 முறை சாம்பியனான மலேசியாவை வீழ்த்தி அசத்தியது. அடுத்ததாக அரையிறுதியில் டென்மாா்க்கை எதிா்கொள்கிறது இந்தியா.

மலேசியாவுக்கு எதிரான சுற்றில் ஒற்றையா் பிரிவில் கே.ஸ்ரீகாந்த் 21-11, 21-17 என நிக் ஸே யோங்கை தோற்கடிக்க, ஹெச்.எஸ்.பிரணாய் 21-13, 21-18 என லியோங் ஜுன் ஹாவை வீழ்த்தினாா். எனினும் லக்ஷயா சென் 21-23, 9-21 என்ற கேம்களில் லீ ஸி ஜியாவிடம் தோல்வியடைந்தாா்.

இரட்டையா் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை 21-19, 21-15 என கோ ஸெ ஃபெய்/நூா் இஸுதின் ஜோடியை வெற்றி கண்டது. ஆனால், கிருஷ்ண பிரசாத் கராகா/விஷ்ணுவா்தன் கௌட் கூட்டணி 19-21, 17-21 என்ற கேம்களில் ஆரோன் சியா/தியோ யீ இ ஜோடியிடம் தோற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com