இது இந்தியாவில் மட்டுமே நடக்கும் : தாமஸ் கோப்பை வீரர் சிரக் ஷெட்டி
By DIN | Published On : 17th May 2022 03:12 PM | Last Updated : 17th May 2022 03:12 PM | அ+அ அ- |

பாங்காக்: தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
1949க்கு பிறகு தாமஸ் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதைக் குறித்து தாமஸ் கோப்பை வீரர் சிரக் ஷெட்டி கூறியதாவது:
ஒரு அணி வெற்றி பெற்றதும் பிரதமர் அந்த அணியை தொடர்பு கொண்டு பேசுவதை இதுவரை நான் பார்த்ததே இல்லை. இது இந்தியாவில் மட்டுமே நடக்கும். மேலும் இது எங்களுக்கு உற்சாகமாக இருந்தது. அவரது மிகுதியான பணிச்சுமையிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி வெற்றிக்கு வாழ்த்து கூறியது மிகுந்த சந்தோசத்தை தந்தது.