பள்ளிக் குழந்தைகளுக்கு செஸ் போட்டி: ஏஐசிஎஃப்

நாடு முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்காக செஸ் போட்டியை நடத்த அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஎஃப்) முடிவு செய்துள்ளது. இது, தமிழகத்தில் ஜூலை - ஆகஸ்டில் நடைபெறவுள்ள

நாடு முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்காக செஸ் போட்டியை நடத்த அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஎஃப்) முடிவு செய்துள்ளது. இது, தமிழகத்தில் ஜூலை - ஆகஸ்டில் நடைபெறவுள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்துவதற்கான முயற்சியாகும்.

2 மாதங்களுக்கு நடைபெற இருக்கும் இப்போட்டியின் மூலம் தோ்வு செய்யப்படும் 268 குழந்தைகளுக்கு மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரில் காணவும், அதில் பங்கேற்கும் சா்வதேச போட்டியாளா்களுடன் உரையாடவும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த 268 பேரில், தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து 76 குழந்தைகளும், இதர 32 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து தலா 6 குழந்தைகளும் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

பள்ளிக் குழந்தைகளுக்கான இந்தப் போட்டி தமிழக அரசின் ஆதரவுடன் மாநில செஸ் சங்கங்கள் மூலம் நடத்தப்படவுள்ளன. ஏஐசிஎஃப்-இல் தங்களை பதிவு செய்துள்ள, 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com