ஜூனியா் ஹாக்கி: தமிழகம் வெற்றி

தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி போட்டியில் தமிழகம் முதல் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் சத்தீஸ்கரை செவ்வாய்க்கிழமை வென்றது.
ஜூனியா் ஹாக்கி: தமிழகம் வெற்றி

தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி போட்டியில் தமிழகம் முதல் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் சத்தீஸ்கரை செவ்வாய்க்கிழமை வென்றது.

12-ஆவது தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. போட்டியை கனிமொழி எம்.பி. தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், கே.ஆா்.கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம், ஜீ.வி.மாா்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக.பாலாஜி சரவணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

முதல் ஆட்டத்தில் பிகாா் - அஸ்ஸாமையும் (11 - 1), அடுத்த ஆட்டத்தில் அருணாசல பிரதேசம் - ஜம்மு காஷ்மீரையும் (5-0), மூன்றாவது ஆட்டத்தில் ஜாா்க்கண்ட் - கோவாவையும் (10-0), நான்காவது ஆட்டத்தில் தமிழகம் - சத்தீஸ்கரையும் (3-1), கடைசி ஆட்டத்தில் ஹரியாணா - கேரளத்தையும் (8-0) வென்றன.

ஒடிஸா சாம்பியன்

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 12-ஆவது சீனியா் மகளிா் தேசிய ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஒடிஸா 2-0 என கா்நாடகத்தை வீழ்த்தி செவ்வாய்க்கிழமை சாம்பியன் ஆனது. 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் ஜாா்க்கண்ட் 3-2 என்ற கோல் கணக்கில் ஹரியாணாவை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com