இலங்கை - வங்கதேசம் முதல் டெஸ்ட் முடிவு என்ன?

மேத்யூஸ், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 2-வது டெஸ்ட், மே 23 அன்று மிர்புரில் தொடங்குகிறது.  
சண்டிமல் (கோப்புப் படம்)
சண்டிமல் (கோப்புப் படம்)

இலங்கை - வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆகியுள்ளது.

இலங்கை அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், சட்டோகிராமில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து, 153 ஓவர்களில் 397 ரன்கள் எடுத்தது. மேத்யூஸ் 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நயீம் ஹசன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 170.1 ஓவர்களில் 465 ரன்கள் எடுத்தது. தமிம் இக்பால் 133, முஷ்ஃபிகுர் ரஹிம் 105 ரன்கள் எடுத்தார்கள். ரஜிதா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

முதல் இன்னிங்ஸில் 68 ரன்கள் பின்தங்கிய இலங்கை அணி, கடைசி நாளன்று கவனமாக விளையாடி 90.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. முதலில் 161 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இலங்கை. இதன்பிறகு தினேஷ் சண்டிமலும் நிரோஷனும் பொறுப்புடன் விளையாடி தோல்வியைத் தவிர்த்தார்கள். சண்டிமல் 39, நிரோஷன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

மேத்யூஸ், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 2-வது டெஸ்ட், மே 23 அன்று மிர்புரில் தொடங்குகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com