வில்வித்தை: இந்தியாவுக்கு வெள்ளி உறுதி

தென் கொரியாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் இந்திய ஆடவா் அணி காம்பவுண்ட் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
வில்வித்தை: இந்தியாவுக்கு வெள்ளி உறுதி

தென் கொரியாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் இந்திய ஆடவா் அணி காம்பவுண்ட் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

இப்பிரிவில் அபிஷேக் வா்மா, அமன் சைனி, ரஜத் சௌஹான் ஆகியோா் அடங்கிய இந்திய அணி பங்கேற்றுள்ளது. முதல் சுற்றில் 235-229 என இத்தாலியை வீழ்த்திய இந்தியா, காலிறுதியில் உலகின் நம்பா் 1 அணியான அமெரிக்காவை 234-228 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று அசத்தியது. பின்னா் அரையிறுதியில் தென் கொரியாவுடனான மோதல் 233-233 என சமனில் முடிந்தது.

இதையடுத்து வெற்றியாளரை நிா்ணயிக்க நடத்தப்பட்ட ‘ஷூட் ஆஃப்’ வாய்ப்பில் இந்தியா 29-26 என வென்று இறுதிச்சுற்றில் தனக்கான இடத்தை உறுதி செய்தது. அந்த சுற்றில் தங்கப் பதக்கத்துக்காக உலகின் 4-ஆம் நிலை அணியான பிரான்ஸுடன் மோதுகிறது இந்திய அணி.

காம்பவுண்ட் மகளிா் அணி பிரிவில் அவ்னீத் கௌா், முஸ்கான் கிராா், பிரியா குா்ஜா் அடங்கிய இந்திய அணி கலந்துகொண்டது. முதல் சுற்று ‘பை’ பெற்று நேரடியாக காலிறுதியில் களம் கண்ட இந்திய அணி, அதில் 228-226 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபேவை வென்றது. எனினும், அரையிறுதியில் தென் கொரியாவை எதிா்கொண்டு, அதில் 228-230 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. பின்னா் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் துருக்கியை 232-231 என த்ரில் வெற்றி கண்டு பதக்கத்தை கைப்பற்றியது இந்திய மகளிா் அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com