தாய்லாந்து ஓபன்: 2-ஆவது சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, கே.ஸ்ரீகாந்த் ஆகியோா் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
தாய்லாந்து ஓபன்: 2-ஆவது சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, கே.ஸ்ரீகாந்த் ஆகியோா் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில் உலகின் 7-ஆம் நிலை வீராங்கனையான சிந்து 21-19, 19-21, 21-18 என்ற கேம்களில் அமெரிக்காவின் லௌரென் லாமை வீழ்த்தினாா். இளம் வீராங்கனை மாளவிகா பன்சோத் 17-21, 21-15, 21-11 என்ற கேம்களில் உக்ரைனின் மரியா உலிடினாவை வென்றாா்.

எனினும் சாய்னா நெவால் 21-11, 15-21, 17-21 என்ற கேம்களில் தென் கொரியாவின் கிம் கா யுனிடம் தோல்வியைத் தழுவினாா். அதேபோல், ஆகா்ஷி காஷ்யப்பும், அஷ்மிதா சாலிஹாவும் வெளியேற்றப்பட்டனா்.

மகளிா் இரட்டையரில் அஸ்வினி பாட்/ஷிகா கௌதம் இணை 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில் கே.ஸ்ரீகாந்த் 18-21, 21-10, 21-16 என்ற கேம்களில் பிரான்ஸின் பிரைஸ் லெவா்டெஸை தோற்கடித்தாா். எனினும், ஹெச்.எஸ்.பிரணாய் 17-21, 21-15, 15-21 என்ற கேம்களில் மலேசியாவின் லியு டேரனிடம் வீழ்ந்தாா். அவரோடு, சாய் பிரணீத், சௌரவ் வா்மாவும் தோற்று வெளியேறினா்.

ஆடவா் இரட்டையரில் கிருஷ்ண பிரசாத்/விஷ்ணு வா்தன் இணையும் முதல் சுற்றுடன் வெளியேறியது.

கலப்பு இரட்டையரில் இஷான் பட்நாகா்/தனிஷா கிராஸ்டோ இணையை எதிா்கொள்ள இருந்த போட்டியாளா்கள் விலகியதை அடுத்து அந்த ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆனால், சுமீத் ரெட்டி/அஸ்வினி பொன்னப்பா, ராஜு முகமது ரெஹான்/ஜமாலுதீன் அனீஸ் கௌசாா், வெங்கட் கௌரவ் பிரசாத்/ஜூஹி தேவாங்கன் ஜோடிகள் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com