யு-23 ஹாக்கி போட்டி:  இந்திய அணி அறிவிப்பு

ஐந்து நாடுகள் பங்கேற்கும் 23 வயதுக்குள்பட்ட (யு-23) மகளிருக்கான ஹாக்கி போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
யு-23 ஹாக்கி போட்டி:  இந்திய அணி அறிவிப்பு

புது தில்லி: ஐந்து நாடுகள் பங்கேற்கும் 23 வயதுக்குள்பட்ட (யு-23) மகளிருக்கான ஹாக்கி போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
அயர்லாந்தில் ஜூன் 19 முதல் 26 வரை நடைபெற இருக்கும் இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக வைஷ்ணவி பால்கே நியமிக்கப்பட்டுள்ளார். போட்டியில் முதலில் இந்தியா, அயர்லாந்தையும் (ஜூன் 19), பின்னர் நெதர்லாந்தையும் (ஜூன் 20), 3-ஆவது ஆட்டத்தில் உக்ரைனையும் (ஜூன் 22), கடைசியாக அமெரிக்காவையும் (ஜூன் 23) சந்திக்கிறது. 
ரவுண்ட் ராபின் சுற்று முடிவில் முதலிரு இடங்களில் இருக்கும் அணிகள் ஜூன் 26-ஆம் தேதி இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளன. 3 மற்றும் 4-ஆம் இடம் பிடிக்கும் அணிகள் வெண்கலப் பதக்கத்துக்காக அதே நாளில் மோதும். 
அணி விவரம்:  குஷ்பு, குர்மாபு ரம்யா (கோல்கீப்பர்கள்); ப்ரீத்தி, மமிதா ஓரம், மஹிமா டெடே, நீலம், ஹிருத்திகா சிங் (டிஃபென்டர்கள்); மஞ்சு சோர்சியா, வைஷ்ணவி விட்டல் பால்கே, ஜோதி சாத்ரி, ஹினா பானோ, நிகிதா டோப்போ, அஷ்வினி கோலேகர், ருதஜா தாதாசோ பிசல் (மிட்பீல்டர்கள்); அன்னு, பியூட்டி டங்டங், மும்தாஸ் கான், தீபிகா சோரெங், மோனிகா டிபி டோப்போ, முதுகுலா பவானி (ஃபார்வர்ட்ஸ்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com