பிரெஞ்சு ஓபன்: ஜோகோவிச், ஸ்வியாடெக் முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 போட்டியாளர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர். 
பிரெஞ்சு ஓபன்: ஜோகோவிச், ஸ்வியாடெக் முன்னேற்றம்


பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 போட்டியாளர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர். 

ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-ஆவது சுற்றில் ஜோகோவிச், 6-2, 6-2, 7-6 (7/4) என்ற செட்களில் ஸ்லோவேனியாவின் அலெக்ஸ் மோல்கானை வீழ்த்தினார். 

2-ஆம் நிலை வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் செர்பியாவின் லாஸ்ரோ டெரெவையும், நட்சத்திர வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6-3, 6-1, 6-4 என உள்நாட்டு வீரரான காரென்டின் மெளடெட்டை வெளியேற்றினர். 

போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஜெர்மனியின் அலெக்ஸாரண்டர் ஸ்வெரேவ் 2-6, 4-6, 6-1, 6-2, 7-5 என்ற செட்களில் ஆர்ஜென்டீன தகுதிச்சுற்று வீரரான செபாஸ்டியன் பேûஸ போராடி வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர்: உலகின் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் 6-0, 6-2 என்ற செட்களில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கேவை தோற்கடித்தார். போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் பெளலா பதோசா 7-5, 3- 6, 6-2 என்ற செட்களில் ஸ்லோவேனியாவின் கஜா யுவானை வென்றார். செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தோல்வியை சந்திக்க, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, ரஷியாவின் வெரோனிகா குதர்மிடோவா 3-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றனர். 

போபண்ணா ஏற்றம்: ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/நெதர்லாந்தின் மாட்வே மிடில்கூப் இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. எனினும், தமிழரான ராம்குமார் ராமநாதன்/அமெரிக்காவின் ஹன்டர் ரீஸ் இணை 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டது. 

சானியா அசத்தல்: இந்தியாவின் சானியா மிர்ஸா/செக் குடியரசின் லூசி ராடெக்கா இணை 2-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற, கலப்பு இரட்டையரில் குரோஷியாவின் இவான் டோடிக்குடன் இணைந்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் சானியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com